Homeசினிமாஇன்று துருவ நட்சத்திரம் வெளியாகாது..! மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

இன்று துருவ நட்சத்திரம் வெளியாகாது..! மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

நடிகர் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று (நவம்பர் 24) வெளியாகாது என இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு Dhruva Natchathiram படத்திற்கான அறிவிப்பு வெளியாகி 7 ஆண்டுகளாக படத்தின் தயாரிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா சரத்குமார், விநாயகன், வம்சி கிருஷ்ணா, அர்ஜுன் தாஸ் போன்ற பலர் நடித்துள்ளனா். இப்படம் நவம்பர் 24 உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் இப்படத்தின் இயக்குநரான கெளதம் வாசுதேவ் மேனன் பல்வேறு சிக்கல்கள் காரனமாக துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகாது என இன்று அதிகாலை 3 மணி அளவில் அவரது Twitter பக்கத்தில் மூலம் தெரிவித்திருந்தார்.

மன்னிக்கவும், துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரவில்லை. எங்களால் முடிந்தவரை நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் எங்களால் இன்னும் ஓரிரு நாட்கள் தேவை என்று தெரிகிறது. துருவ நட்சத்திரம் திரைப்படம் உலகெங்கிலும் உள்ள எல்லா இடங்களிலும் முன்பதிவுகள் மற்றும் சரியான திரைகள் மூலம் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை அளிக்கும் என நம்புகிறோம்.

படத்துக்கான ஆதரவு ரசிகர்கள் மத்தில் பெரிய அளவில் இருக்கிறது. இது மேலும் எங்களைத் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம்! என Gautham Vasudev Menon அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துருவ நட்சத்திரம் படத்திற்கான சிக்கல்கள்

நடிகர் சிம்புவின் படத்திற்காக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தைத் திருப்பி அளிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது All In Pictures நிறுவனத்திடம் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பெற்ற பணத்தை திருப்பித் தரும் வரை துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தினார்.

Gautham Vasudev Menon

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துருவ நட்சத்திரம் வெளியாகும் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் பணத்தைத் திருப்பி தராமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடமாட்டோம் என வழக்கறிஞர் உறுதியளித்தார்.

கெளதம் வாசுதேவ் மேனன் தரப்பு வழக்கறிஞர் கூறியதை ஏற்று கொண்ட உயர்நீதிமன்றம், இன்று காலை 10 மணிக்குள் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு 2.40 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு பணத்தை வழங்காவிட்டால் படத்தை வெளியிடக்கூடாது என்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிட்டார்.

இந்த சிக்கல்கள் காரணமாக துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாகாது என இயக்குநர் வருத்தத்துடன் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு சில நாட்களில் துருவ நட்சத்திரம் படத்தை நிச்சயமாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular