விளையாட்டு

IPL 2024: மேட்ச் பார்க்க செல்பவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்..!

இந்திய அளவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரில் நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியை காண பல ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இந்த வருட ஐபிஎல் சீசன் (IPL 2024) 17-வது சீசன் ஆகும். இந்த சீசனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எம்.எஸ். தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஃபாஃப் டூ பிளசிஸ் (Faf du Plessis) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி நாளை இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த சீனனில் முதல் போட்டி என்பதாலும் இது சென்னை அணியின் போட்டி என்பதாலும் இந்த போட்டியை காண பல லட்சம் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த போட்டிகளுக்கு எப்போது டிக்கெட்டுகள் நேரில் தான் விற்கப்படும். ஆனால் இந்த வருடம் ஐபிஎல் டிக்கெட்டுகள் முதல் முறையாக ஆன்லைனில் விற்கப்படுகிறது. இந்த நிலையில் தான் CSK vs RCB அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டது. இதற்கான முன்பதிவு கடந்த திங்கட்கிழமை (மார்ச் 18) அன்று தொடங்கியது.

இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ரூ.1,700 ரூபாயில் இருந்து தொடங்கி ரூ.7,500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதைனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகவே பல லட்சம் பேர் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சி செய்து வந்தனர். ஆனால் பலருக்கு டிக்கெட்கள் கிடைக்கவில்லை. அனைத்து விக்கெட்டுகளும் வித்து தீர்ந்தது.

இந்நிலையில் தான் தற்போது இந்த CSK Vs RCB போட்டியை காண சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு வருபவர்களுக்கு இலவச பஸ் பயணம் (IPL 2024 Free Bus Offer in Chennai) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி மக்கள் தாங்கள் வாங்கிய ஆன்லைன் டிக்கெட்களை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்பின் படி போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கு இலவசமாக செல்லலாம் (Free bus to Chepakkam stadium) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குளிர்சாதனப் பேருந்துகளுக்கு இந்த சலுகை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை பற்றிய அறிவிப்பு..! மகிழ்ச்சியில் மாணவர்கள்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago