சமையல் குறிப்புகள்

சுவையான குலு குலு பாதாம் பால் செய்வது எப்படி..! ஈஸியா செய்யலாம் வாங்க..!

பாதாம் பால் பிடிக்காத மக்களே இருக்க முடியாது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த பாணங்களில் முக்கியமான ஒன்று தான் இந்த பாதாம் பால். இதனை நம்மில் பலரும் கடைகளில் வாங்கி பருகி இருப்போம் அல்லது அதற்கு என்று விற்கப்படும் பொடிகளை வைத்து வீடுகளிலேயே பாதாம் பால் தயார் செய்து பருகி இருப்போம். ஆனால் இதுபோல கடைகளில் வாங்கி பருகுவதும் அல்லது கடைகளில் விற்கப்படும் பொடிகளை வாங்கி அதனை வைத்து பாதாம் பால் செய்து குடிப்பதும் உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல என்று மருத்துவர்களும் கூறுகின்றனர். அதேபோல நமக்கும் தெரியும் எனினும் நாம் வாங்கி பருகுகிறோம். எனவே இனி நாம் நம் வீடுகளிலேயே பாதாம் பால் எளிமையாக செய்யலாம். How To Make Badam Milk Recipie in Tamil என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

பாதாம் பால் செய்முறை (How To Make Badam Milk Recipie)

தேவையான பொருட்கள்

  • பாதாம் – 1/4 கப்
  • பால் – 2 கப்
  • பிஸ்தா – 10
  • முந்திரி – 10
  • சர்க்கரை – 3 ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – 1/2 கப்
  • குங்குமப்பூ – 20 இதழ்கள்

செய்முறை

  • பாதாம் பால் செய்வதற்கு ஒரு நாள் முன்னரே பாதாமை இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்க வேண்டும். அப்படி இல்லை எனில் சூடான நீரில் 30 முதல் 60 நிமிடங்கள் வரை ஊறவைத்து எடுத்துக்கொள்ளலாம். தற்போது நன்கு ஊறியுள்ள பாதாமின் தோலை அகற்றி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • இதனை ஒரு பிளெண்டர் அல்லது மிக்ஸர் ஜாரில் சேர்த்து அதோடு முந்திரி மற்றும் பிஸ்தாவையும் சேர்த்து கரடுமுரடான அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • தற்போது மிக்ஸர் ஜாரில் பாதாமை சேர்த்து அதனுடன் 2-3 ஸ்பூன் பால் சேர்த்து கரடுமுரடான பேஸ்ட் செய்யவும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் பால் சேர்த்து அதனை நன்கு காய்ச்சவும். கொதி வந்த உடன் சிறிது தீயை குறைத்து 5 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விடவும்.
  • எடுத்து வைத்துள்ள குங்குமப்பூவுடன் சிறிது வெதுவெதுப்பான பாலைச் சேர்த்து, நல்ல நிறம் வரும் வரை தனியாக வைக்கவும்.
  • இப்போது அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு பாலை நன்கு காய்ச்சவும். தற்போது குங்குமப்பூ பால் சேர்த்து கலக்கவும்.
  • தற்போது கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பிஸ்தா பவுடரை சேர்க்கவும். பின்னர் அதனை 3 முதல் 4 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  • இறுதியாக சர்க்கரையை சேர்த்து அதனை நன்கு கரையும் வரை கலக்கவும். பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது ஒரு கிளாஸில் பாதாம் பாலை ஊற்றி பாதாம் மற்றும் குங்குமப்பூ இழைகளால் அலங்கரிக்கவும். இதனை இந்த கோடைக்கு குளிர் சாதன பெட்டியில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக குடிக்கலாம். இதனை குளிர்காலத்தில் சூடாகவே பரிமாறலாம். இதனை இரண்டு நாட்கள் வரை குளிர் சாதன பெட்டியில் வைத்து பறிமாறவும்.
இதையும் படியுங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் உருக வைக்கும் குளுகுளு குல்பி..! வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!

நாம் இப்பதிவில் உடலுக்கு ஆரோக்கியமான பாதாம் பால் செய்வது எப்படி (Badam Milk Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம். இதே போன்ற செய்முறையில் பாதாம் பால் செய்து குடும்பத்துடன் பருகி மகிழுங்கள்.

இதையும் படியுங்கள்: உடலுக்கு வலுவான கம்பு லட்டு குழந்தைகளுக்கு பிடித்தது போல் செய்வது எப்படி..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago