சமையல் குறிப்புகள்

அடுப்பே இல்லாமல்..! துளி கூட சர்க்கரை சேர்க்காமல் இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருள் தான் ஐஸ்கிரீம். அதுவும் இந்த கோடை காலத்தில் செல்லவே தேவையில்லை அடிக்கடி கடைகளில் வாங்கி சாப்பிடுவது உண்டு. இப்போதெல்லாம் சிலர் தங்களின் வீடுகளிலேயே ஐஸ்கிரீம் தயார் செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் அது மிகவும் சுலபம் அல்ல நீண்ட நேரம் எடுத்து சமைத்து செய்ய வேண்டும. மேலும் இந்த ஐஸ்கிரீம்களில் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்படுவதாலும் பலர் இதனை வீடுகளில் முயற்சி செய்யமலே இருந்து இருப்போம். எனவே நாம் இப்பதிவில் அடுப்பு மற்றும் சர்க்கரையை பயன்படுத்தாமல் சுவையான ஐஸ்கிரீம் செய்வது எப்படி (How To Make Ice Cream Without Gas in Tamil) என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ஐஸ்கிரீம் செய்வது எப்படி (How To Make Ice Cream in Tamil)

தேவையான பொருட்கள்

  • வாழைப்பழம் – 7 முதல் 8 வரை
  • கொக்கோ பவுடர் – அரை கப்
  • பீனட் பட்டர் – 5 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் பால் – அரை கப்

ஐஸ்கிரீம் செய்முறை (Ice Cream Recipe Without Gas in Tamil)

  • இந்த ஐஸ்கிரீம் ரெசிபிக்கு வாழைப்பழம் தான் முக்கியமான பொருள் எனவே அதனை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது நாம் வெட்டி வைத்துள்ள வாழைப்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனோடு பீனட் பட்டர் சேர்த்து நன்கு பிளண்ட் செய்யவும்.
  • இவை நன்றாக பிளெண்ட் ஆன பிறகு அதோடு கொக்கோ பவுடர் சேர்த்து மீண்டும் நன்றாக பிளெண்ட் செய்ய வேண்டும்.
  • இப்போது இந்த கலவையைில் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி மீண்டும் பிளெண்ட் செய்த பிறகு அதனை ஒரு கண்டெய்னரில் ஊற்றவும்.
  • இப்போது அதனை நன்றாக மூடி, பிரிட்ஜில் வைத்து நன்றாக ப்ரீஸ் செய்யவும். இந்த கலவை நன்றாக ப்ரீஸ் அன பிறகு அதனை ஸ்கூப்பாக எடுத்து நாம் சாப்பிடலாம். இப்போது அடுப்பே இல்லாமல் சூப்பரான ஐஸ்கிரீம் தயார்.

நாம் இப்பதிவில் அடுப்பு மற்றும் சர்க்கரை இல்லாமல் சுவையான ஐஸ்கிரீம் செய்வது எப்படி (Ice Cream Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

அடுப்பே இல்லாமல்..! துளி கூட சர்க்கரை சேர்க்காமல் இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க..!

இப்பதிவில் அடுப்பு மற்றும் சர்க்கரையை பயன்படுத்தாமல் சுவையான ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Type: Dessert

Keywords: Ice Cream, Ice Cream Recipe

Recipe Yield: 2

Preparation Time: PT10M

Cooking Time: PT10M

Total Time: PT20M

Recipe Ingredients:

  • Banana – 7 to 8
  • Cocoa powder – half a cup
  • Peanut butter – 5 tbsp
  • Coconut milk – half a cup

Recipe Instructions: இந்த ஐஸ்கிரீம் ரெசிபிக்கு வாழைப்பழம் தான் முக்கியமான பொருள் எனவே அதனை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். இப்போது நாம் வெட்டி வைத்துள்ள வாழைப்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனோடு பீனட் பட்டர் சேர்த்து நன்கு பிளண்ட் செய்யவும். இவை நன்றாக பிளெண்ட் ஆன பிறகு அதோடு கொக்கோ பவுடர் சேர்த்து மீண்டும் நன்றாக பிளெண்ட் செய்ய வேண்டும். இப்போது இந்த கலவையைில் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி மீண்டும் பிளெண்ட் செய்த பிறகு அதனை ஒரு கண்டெய்னரில் ஊற்றவும். இப்போது அதனை நன்றாக மூடி, பிரிட்ஜில் வைத்து நன்றாக ப்ரீஸ் செய்யவும். இந்த கலவை நன்றாக ப்ரீஸ் அன பிறகு அதனை ஸ்கூப்பாக எடுத்து நாம் சாப்பிடலாம். இப்போது அடுப்பே இல்லாமல் சூப்பரான ஐஸ்கிரீம் தயார்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் உருக வைக்கும் குளுகுளு குல்பி..! வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago