சமையல் குறிப்புகள்

வெயிலுக்கு ஏற்ற குளு குளு கம்பங்கூழ்..! ஈஸியா செய்வது எப்படி?

கோடை காலம் தொடங்கிவிட்டது இதற்கு ஏற்றாற் போல நமது உணவு பழக்கவழக்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த கோடைக்கு மிகவும் சிறந்த உணவுகள் என்றால் அது நம் பாரம்பரிய உணவுகள் தான். இவற்றை நாம் உண்பதன் மூலம் நம் உடலை வெப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே இனி வரும் காலங்களில் நாம் உடலை குளிர்ச்சியா வைத்துக் கொள்ளும் உணவுகளை தான் உண்ண வேண்டும். அது போன்ற உணுவுகளில் முக்கிய இடத்தை பிடிப்பது தான் இந்த கம்பங்கூழ். இது நம் உடலை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே இப்பதிவில் இந்த கம்பங்கூழ் சுவையாக செய்வது எப்படி (How to make Kambu Kool) என்பது குறித்து பார்க்கலாம்.

கம்பங்கூழ் செய்முறை (How to Make Kambu Koozh Recipe in Tamil)

தேவையான பொருட்கள்

  • கம்பு மாவு – 1 கப்
  • அரிசி – 1 கை பிடி
  • உப்பு – தேவையான அளவு
  • தயிர் – 1 கப்

செய்முறை

  • முதலில் கம்பை நன்றாக கழுவி அதனை அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • அதன் பிறகு தண்ணீரை நன்கு வடித்து நிழலில் காயவைக்கவும். நன்கு காய்ந்த பிறகு அதனை மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • தற்போது பொடித்த கம்பு மாவை தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். இந்த கலவையை ஒருநாள் முழுவதும் புளிக்க வைக்கவேண்டும்.
  • இந்த கம்பங்கூழ் செய்வதற்கு அரிசியை நொய்யாக உடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து முக்கால் பாகம் வெந்தத உடன், நாம் முதலில் கரைத்து புளிக்க வைத்த கம்பு மாவை இதில் சேர்த்து கட்டி இல்லாதவாறு கலந்து விட வேண்டும்.
  • பின்னர் இவை இரண்டையும் நன்கு வேகவிட வேண்டும். அதன் பிறகு அதனை இறக்கி அப்படியே மூடி வைத்து விடவும்.
  • மறுநாள் காலையில் இந்த கலவையில் உப்பு மற்றும் தயிர் சேர்க்க வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளலாம். இப்போது இந்த வெயிலுக்கு குளிர்ச்சி தரும் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கம்பங்கூழ் தயார்.

நாம் இப்பதிவில் இந்த வெயில் காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் கம்பங்கூழ் எளிமையாக செய்வது எப்படி (Kambu Koozh Seivathu Eppadi) என்று பார்த்துள்ளோம்.

இதையும் படியுங்கள்: இந்த வெயிலுக்கு 5 நிமிடத்தில் சுவையான ராகி கூழ் செய்யலாம் வாங்க..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago