Homeசெய்திகள்பள்ளி மாணவிக்கு சினிமாவில் பாட வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர்..! யார் என்று தெரியுமா..!

பள்ளி மாணவிக்கு சினிமாவில் பாட வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர்..! யார் என்று தெரியுமா..!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி தர்ஷினி பாடிய பாடல் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இதனை பார்த்த Music director Imman தர்ஷினிக்கு படத்தில் பாட வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிள் உள்ள அம்மணம்பாக்கம் என்னும் ஊரில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் பம்பை உடுக்கை வாசிக்கும் இசைகலைஞர் ஆவார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் தர்ஷினி அனந்தமங்கலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தையை போலவே நாட்டுப்புற பாடில்களில் அதிக ஈர்ப்பு உள்ளவர். தர்ஷினியின் திறமையை அறிந்த பள்ளி ஆசிரியர் இவரை இசைப்பள்ளி ஒன்றில் சேர்த்து உள்ளார். இந்த நிலையில் தர்ஷினி பாடிய ஒரு பாடல் வீடியோ எடுத்து கார்த்திக் என்ற இளைஞர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

பள்ளி மாணவிக்கு பாட வாய்ப்பு தரும் Music director Imman

தர்ஷினி பாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இந்த வீடியோவை பார்த்த D. Imman தர்ஷினின் தந்தைக்கு தொடர்பு கொண்டு தர்ஷினியின் குரல் வளத்தை பாராட்டி உள்ளார். இதனை தொடர்ந்து தர்ஷினிக்கு படத்தில் பாட வாய்ப்பு தருவதாகவும் கூறியுள்ளார் இசையமைப்பாளர் டி. இமான்.

Imman Music Director

திறமைசாலிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு படத்தில் பட வாய்ப்பு தருவார் இசையமைப்பாளர் இமான். பள்ளி மாணவி தர்ஷினி முதல் ஆள் இல்லை. இதற்கு முன்பாக பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி ஆன திருமூர்த்தி அவர்கள் கண்ணான கண்ணே பாடலை பாடினார். இதை சமூக வலைதளத்தில் கேட்ட இமான் அவர்கள் ஜீவா நடித்த சீறு படத்திலும், ரஜினி நடித்த அண்ணாத்த படித்திலும் தனது இசையில் பாட வாய்ப்பு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் டி. இமான் பள்ளி மாணவி தர்ஷினி -க்கு படத்தில் பட வாய்ப்பு தருவதாக கூறிய செய்தியை கேட்ட தர்ஷினியின் தங்கை மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular