Homeசெய்திகள்விண்ணைத்தாண்டி வருவாயா? மீண்டும் இணைய உள்ள ஜெஸ்ஸி கார்த்திக் ஜோடி..!

விண்ணைத்தாண்டி வருவாயா? மீண்டும் இணைய உள்ள ஜெஸ்ஸி கார்த்திக் ஜோடி..!

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி (Vinnaithaandi Varuvaayaa)வருவாயா. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த படம் வெளிவந்து கிட்டதட்ட 14-ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும் இப்போது வரை இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி ஈர்ப்பு உள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டது என்றே கூறலாம்.

விண்ணை தாண்டி வருவாயா படம் வெளியான சமயத்தில் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்த படம் வெளிவந்து அடுத்த சில மாதங்களுக்கு ஜெஸ்ஸியின் அலை தான் வீசியது. அந்த அளவிற்கு ஜெஸ்ஸி கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டது என்றே கூறலாம்.

இந்நிலையில் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த் ஜோடி இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் (Thug Life Movie Update) தக் லைஃப். இந்த படத்தில் நடிகர் கமல், ஜெயம் ரவி, துல்கர், சிம்பு போன்ற ஹூரோக்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் இவர்களை தவிர்த்து நடிகை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லெட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. எனவே இந்த படத்தில் த்ரிஷாவிற்கு ஜோடியாக சிம்பு இணைந்து நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thug Life Movie Update
மேலும் படிக்க: Thug Life படத்தில் இணையும் அடுத்த பிரபலம்..! யார் அந்த நடிகர் தெரியுமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular