Homeசினிமாஜோ படத்தின் திரைவிமர்சனம்..! Joe Movie Review in Tamil..!

ஜோ படத்தின் திரைவிமர்சனம்..! Joe Movie Review in Tamil..!

ஒரு மாதத்திற்கு முன்பு எந்தவித எதிர்ப்பார்புகளும் இன்றி திரையரங்குகளில் வெளியாகிய திரைப்படம் தான் ஜோ. இந்த எந்த வித எதிர்ப்பார்ப்புகளும் இன்றி வெளியானாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் 4 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

இப்படத்தினை ஹரிஹரன் ராம் என்ற இயக்குநர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாகவும் மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் தேதி வெளியானது. இந்த படம் ஒரு முழுமையாக காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதைகளமும் நன்றாக இருப்பதால் படம் மக்களுக்கு பிடித்துப்போனது. இதன் மூலம் விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை இப்படம் பெற்றுள்ளது. மேலும் விமர்சனம் மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

ஜோ படத்தின் திரைவிமர்சனம்
இதையும் படியுங்கள்: கூழாங்கல் திரைப்படத்தின் விமர்சனம்..!

ஜோ திரைபடத்தின் கதை சுருக்கம்

  • இந்த ஜோ திரைபடத்தில் ஜோ கதாபாத்திரத்தில் ரியோ ராஜ் நடித்துள்ளார். இக்கதையில் ஜோ ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரே மகன், பள்ளி காலம் முதலே நண்பர்களுடன் கவலையற்ற வாழ்க்கையை நடத்தும் பையனாக இருக்கிறார்.
  • அதன் பிறகு கல்லூரி கதை, அப்போது ஜோ தனது வகுப்புத் தோழியான கேரளாவைச் சேர்ந்த பெண் சுச்சி (மாளவிகா மனோஜ்) மீது காதல் கொள்கிறார். இருவரும் கல்லூரி முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். கல்லூரி முடிந்தவுடன் ஜோ சுச்சியின் குடுபத்தினரை சந்தித்து பேசுகிறார். அப்போது பிரச்சனை ஏற்படவே இருவரும் பிரிகின்றனர்.
  • இதன் பிறகு மிகவும் உடைந்து போகிறார் ஜோ, எனினும் அதிலிருந்து மீள போராடுகிறார். அதன் பிறகு அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதே ஒரே தீர்வாக இருக்கும் என்று அவனது பெற்றோர் முடிவு செய்கின்றனர்.
  • எனவே அவர்களுக்கு பிடித்த ஸ்ருதியை (பவ்யா த்ரிகா) என்ற பொண்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறுகின்றனர். ஜோ அவருடைய பெற்றோரை மகிழ்விக்க திருமணத்திற்கு ஒப்புகொள்கிறார்.
  • ஆனால் இந்த திருமணத்தில் ஸ்ருதிக்கு விருப்பமில்லை. இந்த விசயம் ஜோவிற்கு தெரியாது. இருவரின் விருப்பங்களுக்கும் எதிராக இருக்கிறது, ஆனாலும் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு பிறகு அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் ஜோ திரைபடத்தின் கதை.

இயக்குநர்: ஹரிஹரன் ராம்

ஒளிப்பதிவாளர்: ராகுல் கே ஜி விக்னேஷ்

இசையமைப்பாளர்: சித்து குமார்

தயாரிப்பாளர்கள்: Sakthi Film Factory

Joe

Director: Hariharan Ram

Date Created: 2023-11-24 22:00

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: ஜோ திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா..! வெற்றி நடை போடுகிறது..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular