Homeசினிமாகூழாங்கல் திரைப்படத்தின் விமர்சனம்..! Koozhangal Movie Review in Tamil..!

கூழாங்கல் திரைப்படத்தின் விமர்சனம்..! Koozhangal Movie Review in Tamil..!

சில நாட்களுக்கு முன்பு OTT தளத்தில் கூழாங்கல் எனும் திரைப்படம் வெளியாகியது. ஆனால் இப்படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளை வென்ற திரைப்படம் என்ற அறிமுகத்தோடு தான் வெளியானது. இப்படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இப்படத்தினை தயாரித்துள்ளனர். இந்த Koozhangal Movie Review பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த படத்தின் கதை மதுரை மாவட்டம் யானை மலைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தொடங்குகிறது. இப்படம் ஒரு குடிகார கணவன், மனைவி, மகன் போன்ற கதாப்பாத்திரங்களை கொண்டு ஒரு எதார்த்தமான கதை களத்தை கொண்டுள்ளது.

இக்கதை கணவன் மனைவி சண்டையில் மனைவி தன் அம்மாவின் வீட்டிற்கு சென்று விடுகிறாள். அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்ற தன் மகனை அழைத்துக்கொண்டு மனைவி வீட்டிற்கு கணவன் செல்கிறார். ஆனால் இவர்கள் அங்கு போகும் முன்பே மனைவி வீட்டிற்கு வந்து விடுகிறாள். எனவே தந்தை மகன் இருவரும் போகும் போதும், வரும் போதும் வழியில் என்னவெல்லாம் நடந்தது என்பது தான் படத்தின் கதை.

Pebbles Movie

இப்படம் மிகவும் சிறிய கதைதான். ஆனால் இக்கதையின் மூலம் ஒரு சுவாரஸ்யமான படத்தை தர இயக்குநர் முயன்றிருக்கிறார். இந்தப் படத்தில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையும் வறண்டுபோனதாகவும் கஷ்டங்கள் நிறைந்ததாகவும் தான் காணப்படுகிறது.

இது போன்ற கதைக்களத்திற்கு சரியான இடத்தை தேர்வு செய்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் அப்படி ஒரு வாழ்க்கையைச் சித்தரிக்கும் நிலப்பரப்பைத் தேர்வுசெய்ததிலேயே இயக்குநர் பாதி வெற்றிபெற்றுவிட்டார் என்றே கூறலாம். இப்படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக அமைந்துள்ளது, மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள க்ளோஸ்–அப் காட்சிகளும் நிலப்பரப்புக்கான வைட்–ஷாட்களும் அட்டகாசமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது நிகழ்நேர ஒலிப்பதிவு என்றாலும் நன்றாக இருக்கிறது என்றே கூறலாம்.

அடுத்தப்படியாக இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களை பற்றி கூறவே வேண்டாம். கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்றே சொல்லலாம். இதில் நாயகனாக நடித்துள்ள கருத்தாண்டி என்பவர் ஒரு நாடகக் கலைஞர் ஆவார். அவருடைய நடிப்பு இப்படத்தில் அட்டகாசமாகவும், எதார்த்தமாகவும் அமைந்துள்ளது. அதேபோல் சிறுவன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள செல்லப் பாண்டியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தின் மொத்த நீளம் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் தான். ஆனால் அதற்குள் கதையை சுவாரஸ்யமாக கூறியுள்ளார் இயக்குநர்.

இயக்குநர்: பி.எஸ்.வினோத் ராஜ்

ஒளிப்பதிவாளர்: ஜெயா பார்த்திபன்

இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பாளர்கள்: ரவுடி பிக்சர்ஸ் ( விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா)

இத்திரைப்படம் Sony Liv தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கூழாங்கல் (Pebbles)

Director: P.S. Vinoth Raj

Date Created: 2020-02-04 16:50

Editor's Rating:
4.5
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular