சமையல் குறிப்புகள்

Laddu Recipe: திருப்பதி லட்டுக்கு இணையான… சுவை மிகுந்த பூந்தி லட்டு செய்வது எப்படி…

Laddu Recipe in Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். உணவு சாப்பிடுவது போன்று இனிப்பு சாப்பிட காலம் நேரம் பார்க்க தேவையில்லை. எப்போது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் சுவையான இனிப்பு வகைகள் சாப்பிடிலாம்.

நமது பழக்க வழக்கத்திற்கும் இனிப்பு வகைகளுக்கு ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. உணவு பரிமாறும் போது முதலில் வைக்கப்படும் பண்டமாக இனிப்பு இடம் பெற்றுள்ளது. அதேபோல் எந்த ஒரு நல்ல செய்தி சொல்வது என்றாலும் அனைவரும் இனிப்பு தருவது தான் தமது கலாச்சாரம் ஆகும். அந்த வைகயில் அனைவருக்கும் பிடித்த இனிப்பான பூந்தி லட்டு (Boondi Laddu) செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் (Laddu Recipe in Tamil) பதிவிட்டுள்ளோம்.

பூந்தி லட்டு செய்வது எப்படி (Laddu Seivathu Eppadi) Laddu Recipe in Tamil

அனைத்து விசேஷத்திற்கும் திருவிழா நாட்களிலும் மற்றவர்களுக்கு பரிசாக கொடுப்பதற்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைதான் லட்டு ஆகும். இந்த இனிப்பான பூந்தி லட்டை (Laddu Seivathu Eppadi) செய்வதற்கான செய்முறை மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தும் பதிவிட்டுள்ளோம்.

தேவையான பொருட்கள் (Laddu Ingredients)

  • கடலைமாவு – 1 கிலோ
  • சர்க்கரை – 2 கிலோ
  • ஏலக்காய் – 25 கிராம்
  • திராட்சை – 50 கிராம்
  • முந்திரி – 50 கிராம்
  • நெய் – 400 கிராம்
  • எண்ணெய் (பொரிப்பதற்கு) – தேவையான அளவு

லட்டு செய்முறை (How to Make Laddu)

  • முதலில் கடலை மாவை கட்டி இல்லாமல் சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு கடலை மாவுடன் சிறிது சிறிதாக நீர் ஊற்றி கரைத்து கொள்ள வேண்டும் (மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்).
  • அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு ஜர்னி கரண்டியில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி தட்ட வேண்டும்.
  • மாவை ஜர்னி கரண்டியில் வைத்து தேய்க்காமல் தட்டினால் பூந்தி தனி தனியாக விழ வேண்டும். அதேபோல் பூந்தி 60 சதவீதம் வெந்தால் போதுமானது முழுவதும் வேக கூடாது.
  • அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் சிறிது நெய் மற்றும் மஞ்சள் புட் கலர் சேர்க்க வேண்டும்.
  • அதன் பிறகு சர்க்கரை பாகுடன் பொரித்து வைத்துள்ள பூந்தியை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
  • பூந்தி சர்க்கரை பாகை இழுத்த பிறகு பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும் போது அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்க வேண்டும் (பூந்தியை மிகவும் கெட்டியாக கிளற கூடாது. பூந்தி ஆறிய பிறகு மிகவும் கடினமாக இருக்கும், எனவே பூந்தி தளர்வாக இருக்கும் போது இறக்கினால் ஆறிய பிறகு லட்டு பிடிக்கலாம்).
  • அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நெய் விட்ட வேண்டும். நெய் சூடான பிறகு முந்திரி மற்றும் காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை பூந்தியில் தேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • அதன் பிறகு 2 முதல் 3 மணி நேரம் வரை நன்றாக ஆறவிட வேண்டும். பின் பூந்தியை சற்று அழுத்தி பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டினால் (உருட்டும் போது சற்று அழுத்தி பிசைந்து உருட்ட வேண்டும்) லட்டு தயார்.
Laddu Recipe: திருப்பதி லட்டுக்கு இணையான… சுவை மிகுந்த பூந்தி லட்டு செய்வது எப்படி…

இந்த பதிவில் பூந்தி லட்டு செய்வதற்கான (Laddu Recipe in Tamil) ஈஸியான செய்முறையை பதிவிட்டுள்ளோம்.

Type: Dessert

Cuisine: Tamil Nadu

Keywords: Laddu Recipe, How to Make Laddu

Recipe Yield: 10

Preparation Time: PT20M

Cooking Time: PT45M

Total Time: PT1H5M

Recipe Ingredients:

  • Groundnut flour – 1 kg
  • Sugar – 2 kg
  • Cardamom – 25 grams
  • Raisins – 50 grams
  • Cashew – 50 grams
  • Ghee – 400 grams
  • Oil (for frying) – required amount
Editor's Rating:
4.5
மேலும் படிக்க: உடலுக்கு வலுவான கம்பு லட்டு குழந்தைகளுக்கு பிடித்தது போல் செய்வது எப்படி..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago