Homeசினிமாஅன்னபூரணியாக மாறிய Lady Superstar நயன்தாரா… 75-வது படத்தின் அப்டேட்..!

அன்னபூரணியாக மாறிய Lady Superstar நயன்தாரா… 75-வது படத்தின் அப்டேட்..!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா -வின் 75 வது படத்திற்கு Annapurani என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் GLIMPSE விடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளியான Jawan படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார் நயன்தாரா. இதன் பிறகு தமிழில் ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த இறைவன் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. தொடர்ந்து, ‘மண்ணாங்கட்டி’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடக்கிறார், மேலும் இப்படத்தில் யோகிபாபுவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவின் 75 வது திரைப்படத்தின் GLIMPSE விடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு “அன்னபூரணி” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜ் மூவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular