HomeவரலாறுPresident Name List of India: இந்தியாவின் குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல்..!

President Name List of India: இந்தியாவின் குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல்..!

இந்திய நாட்டின் முதல் குடிமகனாக இந்திய குடியரசு தலைவர் குறிப்பிடப்படுகிறார். இந்த பதிவில் இந்தய நாட்டின் குடியரசு தலைவர்களின் பெயர் (President Name List of India) பட்டியலை பதிவிட்டுள்ளாம். இந்தியா விடுதலை அடைந்தது முதல் தற்போது வரை உள்ள குடியரசு தலைவர்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய நாடு கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி விடுதலை பெற்றது. அன்று முதல் இன்று வரை இந்தியாவிற்கு ஜனநாயக ஆட்சி அல்லது மக்களாட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஜனநாயக ஆட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களே நடத்துவதே ஆகும். “மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்” என வரைவிலக்கணம் கூறுகிறது.

இந்த ஜனநாயக நாட்டின் முதல் குடிமகனாக இருப்பவர் தான் President. இவர் இந்திய அரசின் தலைவராக கருதப்படுகிறார். மேலும் குடியரசு தலைவர் மத்திய நிர்வாகக் குழுவின் தலைவராகவும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவராகவும் மற்றும் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியும் உள்ளார். இந்த பதிவின் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் முதல் தற்போது உள்ள குடியரசு தலைவர் பெயர் (All President of India Name List) பட்டியல் மற்றும் அவர்கள் குடியரசு தலைவராக இருந்த காலம் வாரியாக பதிவிட்டுள்ளோம்.

India President List From 1950 to 2022

குடியரசு தலைவர்கள் பெயர்பதவி காலம்
டாக்டர். திரு. இராஜேந்திரப் பிரசாத்ஜனவரி 26, 1950 – மே 13, 1962
திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்மே 13, 1962 – மே 13, 1967
திரு. ஜாகீர் உசேன்மே 13, 1967 – மே 03, 1969
திரு. வராஹகிரி வெங்கட கிரிமே 03, 1969 – ஜூலை 20, 1969
திரு. முகம்மது இதயத்துல்லாஜூலை 20, 1969 – ஆகஸ்ட் 24, 1969
திரு. வராஹகிரி வெங்கட கிரிஆகஸ்ட் 24, 1969 – ஆகஸ்ட் 24, 1974
திரு. பக்ருதீன் அலி அகமதுஆகஸ்ட் 24, 1974 – பிப்ரவரி 11, 1977
திரு. பசப்பா தனப்பா ஜாட்டிபிப்ரவரி 11, 1977 – ஜூலை 25, 1977
திரு. நீலம் சஞ்சீவ ரெட்டிஜூலை 25, 1977 – ஜூலை 25, 1982
திரு. ஜெயில் சிங்ஜூலை 25, 1982 – ஜூலை 25, 1987
திரு. ரா. வெங்கட்ராமன்ஜூலை 25, 1987 – ஜூலை 25, 1992
திரு. சங்கர் தயாள் சர்மாஜூலை 25, 1992 – ஜூலை 25, 1997
திரு. கே. ஆர். நாராயணன்ஜூலை 25, 1997 – ஜூலை 25, 2002
திரு. ஏ. பி. ஜே. அப்துல் கலாம்ஜூலை 25, 2002 – ஜூலை 25, 2007
திருமதி. பிரதிபா பாட்டில்ஜூலை 25, 2007 – ஜூலை 25, 2012
திரு. பிரணப் முக்கர்ஜிஜூலை 25, 2012 – ஜூலை 25, 2017
திரு. ராம் நாத் கோவிந்த்ஜூலை 25, 2017 – ஜூலை 25, 2022
திருமதி. திரௌபதி முர்முஜூலை 25, 2022 – தற்போது

இந்தியாவின் அனைத்து ஜனாதிபதிகள் பட்டியல் (List of All Presidents of India) – President Name List of India

இந்தியாவின் விடுதலைக்கு பிறகு 1950 ஆம் ஆண்டு தான் இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. எனவே அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட கனவில் 26 ஆம் தேதி தென் இந்தியாவின் குடியரசு தினம். அன்று தான் இந்தியாவின் முதல் குடியரசு தலைவரும் அவரது பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த பதிவில் இந்தியாவின் குடியரசு தலைவர்கள் பெயர் (Kudiyarasu Thalaivar Name) மற்றும் அவர்கள் பதவி காலம் பற்றி பார்க்களாம்.

டாக்டர். திரு. இராஜேந்திரப் பிரசாத்

திரு. இராஜேந்திரப் பிரசாத் இவர் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் (First President of India) ஆவார். மேலும் இவர் இந்தியாவின் விடுதலைக்காக போராடிய வீரர். இவர் இந்தியாவின் குடியரசு தலைவராக 1950 முதல் 1962 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் Dr. Rajendra Prasad ஆவர்.

திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இவர் இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவர் (Secound President of India) ஆவார். இவர் இந்தியாவின் குடியரசு தலைவராக 1962 முதல் 1967 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். Sarvepalli Radhakrishnan தான் இந்திய நாட்டின் முதல் துணை குடியரசு தலைவரும் ஆவார். இவரின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

திரு. ஜாகீர் உசேன்

இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவர் திரு. ஜாகீர் உசேன் ஆவார். இவர் இந்தியாவின் குடியரசு தலைவராக மே 13, 1967 முதல் மே 03, 1969 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவர் முன்னால் President ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவராக இருந்த போது துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். இவர் இந்தியாவின் முதல் முஸ்லீம் குடியரசு தலைவர் ஆவார்.

திரு. வராஹகிரி வெங்கட கிரி

இந்தியாவின் நான்காவது குடியரசு தலைவர் திரு. வராஹகிரி வெங்கட கிரி ஆவார். இவரை வி. வி. கிரி எனவும் அழைப்பார்கள். இவர் மே 03, 1969 – ஜூலை 20, 1969 ஆகிய காலகட்டத்தில் பொறுப்பு குடியரசு தலைவராகவும் அதன் பிறகு ஆகஸ்ட் 24, 1969 – ஆகஸ்ட் 24, 1974 ஆகிய காலகட்டத்தில் குடியரசு தலைவராகவும் பதவி வகித்தார். இவரே இந்தியாவின் முதல் பொருப்பு பொறுப்புதலைவராக பதவி வகித்தவர் ஆவார்.

திரு. முகம்மது இதயத்துல்லா

இவர் இந்தியாவின் இரண்டாவது பொறுப்பு குடியரசு தலைவர் ஆவார். திரு. முகம்மது இதயத்துல்லா (Mohammad Hidayatullah). இவர் ஜூலை 20, 1969 – ஆகஸ்ட் 24, 1969 வரை இந்தியாவின் பொறுப்பு ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

திரு. பக்ருதீன் அலி அகமது

Fakhruddin Ali Ahmed என்பவர் இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஆகஸ்ட் 24, 1974 முதல் பிப்ரவரி 11, 1977 வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். இவர் 1977 ஆம் ஆண்டு பிப்ரவி 11 ஆம் தேதி மரணம் அடைந்தார். இறக்கும் வரை குடியரசு தலைவராக பதவி வகித்தார் திரு. பக்ருதீன் அலி அகமது.

திரு. பசப்பா தனப்பா ஜாட்டி

இந்தியாவின் மூன்றாவது பொறுப்பு குடியரசு தலைவராக திரு. பசப்பா தனப்பா ஜாட்டி பதவி வகித்தார். இவர் பிப்ரவரி 11, 1977 – ஜூலை 25, 1977 ஆம் ஆண்டு வரை 164 நாட்கள் இந்தியாவின் பொறுப்பு குடியரசு தலைவராக பதவி வகித்தார்.

திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி

திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி இவர் இந்தியாவின் ஆறாவது ஜனாதிபதி ஆவார். இவர் ஜூலை 25, 1977 முதல் ஜூலை 25, 1982 வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். இவர் ஆந்திர பிரதேசத்தின் முதல் முதலமைச்சர் ஆவார்.

திரு. ஜெயில் சிங்

ஜூலை 25, 1982 ஆண்டு முதல் ஜூலை 25, 1987 ஆண்டு வரை இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி வகித்தவர் திரு. ஜெயில் சிங் ஆவார். இவர் ஏழாவது குடியரசு தலைவர் ஆவார். இவர் இந்தியவாவின் முதல் சீக்கிய ஜனாதிபதி ஆவார்.

திரு. ரா. வெங்கட்ராமன்

திரு. ரா. வெங்கட்ராமன் இவர் இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதி ஆவார். இவர் ஜூலை 25, 1987 ஆண்டு முதல் ஜூலை 25, 1992 ஆண்டு வரை இவர் குடியரசு தலைவராக பதவி வகித்தார். Ramaswamy Venkataraman தான் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட முதல் குடியரசு தலைவர் ஆவார்.

திரு. சங்கர் தயாள் சர்மா

இந்தியாவின் ஒன்பதாவது ஜனாதிபதி திரு. சங்கர் தயாள் சர்மா ஆவார். இவர் 1992 ஆண்டு முதல் 1997 ஆண்டு வரை இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி வகித்தார். 1952 ஆம் ஆண்டு முதல் 1956 ஆண்டு மாநில சீரமைப்பு பணிகள் முடிவடையும் வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

மேலும் படிக்க: National Symbols of India: இந்திய தேசிய சின்னங்கள் மற்றும் அதன் முக்கியத்துவங்கள்..!

திரு. கே. ஆர். நாராயணன்

திரு. கே. ஆர். நாராயணன் இந்தியாவின் பத்தாவது குடியரசு தலைவர் ஆவார். இவர் 1997 ஆண்டு முதல் 2002 ஆண்டு வரை இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி வகித்தார். இவர் இதற்கு முன்னர் இந்தியாவின் வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றினார்.

திரு. ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

A. P. J. Abdul Kalam இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் ஆவார். இவர் ஒரு அறிவியல் விஞ்ஞானி ஆவார். இவரின் முழு பெயர் அவுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் என்பதாகும். இவர் ஏவுகணை நாயகன் என அழைக்கப்படுகிறார். இவர் ஜூலை 25, 2002 ஆண்டு முதல் ஜூலை 25, 2007 ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

President of India

திருமதி. பிரதிபா பாட்டில்

இந்தியாவின் 12 குடியரசு தலைவர் திருமதி. பிரதிபா பாட்டில் ஆவார். இவர் இந்தியாவின் ஜனாதிபதியாக ஜூலை 25, 2007 ஆண்டு முதல் ஜூலை 25, 2012 ஆண்டு வரை பதவி வகித்தார். இவரே இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் ஆவார். அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் கவர்னராக இருந்த பெருமையும் Pratibha Patil அவர்கயைவே சேரும்.

திரு. பிரணப் முக்கர்ஜி

2012 முதுல் 2017 ஆண்டு வரை இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் Pranab Mukherjee ஆவார். இவர் இந்தியாவின் 13 குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1973 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் தொழில் துறை மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

13th President of India

திரு. ராம் நாத் கோவிந்த்

Ram Nath Kovind (ராம் நாத் கோவிந்த்) இந்தியாவின் 14 வது குடியரசு தலைவர் ஆவார். இவர் 2017 முதல் 2022 வரை இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி பயித்தார். இவர் ஏப்ரல் 1994 ஆம ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி. ஆக பதவி வகித்தார். அதன் பிறக தொடர்ச்சியாக பன்னிரண்டு ஆண்டுகள் வரை அவர் எம்.பி. பதவி வகித்தார்.

திருமதி. திரௌபதி முர்மு

President Name List of India

இவர் இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவர் ஆவர். Droupadi Murmu அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி ஏற்று கொண்டார். வரும் 2027 ஆம் ஆண்டு வரை இவரோ President of India ஆவார். இவர் இந்தியாவின் 15 வது குடியரசு தலைவர். மேலும் இவரே முதல் பழங்குடியின ஜனாதிபதி ஆவார்.

இவர்கள் அனைவரும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக விழங்கியவர்கள். 1950 முதல் தற்போது வரை இந்திய நாட்டின் முதல் குடிமகனாக இருக்கும் குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியலை இந்த பதிவல் பதிவிட்டுள்ளாம். இது போட்டித் தேர்வு எழுதும் அனைவருக்கும் மிகவும் உதவும் வகையில் தெளிவாக பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Tamil Nadu State Symbols: தமிழ்நாட்டின் சின்னங்கள் மற்றும் அதன் சிறப்புகள்..!

President of India – FAQ

1. இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் யார்?

திருமதி. பிரதிபா பாட்டில் இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் ஆவார்.

2. குறுகிய காலம் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர் யார்?

திரு. முகம்மது இதயத்துல்லா பொறுப்பு குடியரசு தலைவராக 35 நாட்கள் பதவி வகித்துள்ளார்.

3. இரண்டு முறை குடியரசு தலைவராக இருந்தவர் யார்?

திரு. வராஹகிரி வெங்கட கிரி இந்தியாவின் குடியரசு தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். ஒரு முறை பொறுப்பு குடியரசு தலைவராகவும் மற்றொரு மறை குடியரசு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular