Homeசினிமாலோகேஷ் கனகராஜ்: புதிய படத்தின் டிரைலரை வெளியிட்டார்...!

லோகேஷ் கனகராஜ்: புதிய படத்தின் டிரைலரை வெளியிட்டார்…!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநரான லோகேஷ் கனகராஜ் புதிய படம் ஒன்றின் டிரைலரை வெளியிட்டுள்ளார். அது என்ன படம், யார் கதாநாயகன் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சதீஷ் தற்பொழுது கதாநாயகனாக நடிக்க தொடங்கியுள்ளார். இவர் கதாநாயகனாக நடித்த நாய் சேகர், ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இவர் வித்தைகாரன் என்ற படத்திலும், முஸ்தபா முஸ்தபா என்ற படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Conjuring Kannappan

இந்நிலையில் நடிகர் சதீஷ் கான்ஜூரிங் கண்ணப்பன் எனும் புதிதாக வெளியாகவுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெரும் பொருட்செலவில், பழங்கால அரங்குகள் எல்லாம் அமைக்கபட்டு தயாராகிவருகிறது. இப்படத்தினை ராஜ் சேவியர் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் நாசர், சரண்யா பொன்வன்னண், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆனந்த் ராஜ், ரெஜினா கசாண்ட்ரா, VTV கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். AGS Entertainment இப்படத்தினை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் Conjuring Kannappan திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரைலரை பிரபல இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு படத்தின் மீது உள்ள ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ள

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular