HomeசினிமாLove Today: சொல்லுங்க மாமாக்குட்டி… அதற்குள் 1 வருடம் ஆகிவிட்டதா?

Love Today: சொல்லுங்க மாமாக்குட்டி… அதற்குள் 1 வருடம் ஆகிவிட்டதா?

Love Today திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி என்பவர் லவ் டுடே படத்தின் ஓராண்டு நிறைவை அனைவரும் நினைவு கூறும் வகையில் வளைதளத்தில் பதிவிட்ட பதிவு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹிட் ஓப்பனிங் கொடுத்து இயக்குநர்

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் Pradeep Ranganathan தமிழச் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி மக்களிடையே நல் வரவேற்பை பெற்றது. Comali படத்திற்கு பிறகு இவர் இயக்கிய திரைப்படம் லவ் டுடே ஆகும்.

Love Today Movie

லவ் டுடே நூறு கோடி வசூல்

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி படம் வேற லெவல் ஹிட் கொடுத்தது, அடுத்ததாக Love Today படத்தை இயக்கினார். இப்படத்தில் ஹிரோவாக பிரதீப் ரங்கநாதனும், ஹீரோயினாக இவானாவும் நடித்திருந்தார்கள். பல திரைப்படங்களில் துணை கதாபத்திரத்தில் நடித்திருந்த Ivana லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைக்கின்றது. மேலும் லவ் டுடே படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான Love Today படம் மக்கள் மத்தியில் நல்ல வரேவற்பை பெற்றதோடு நூறு கோடி ரூபாய் வசூலும் செய்தது. யுவன் சங்கர் ராஜா இசையும் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது என்றே கூறவேண்டும்.

1 year of Love Today

Love Today படமானது காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்து வகையிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. இன்னிலையில் இப்படத்தின் ஓரான்டை கொண்டாடும் வகைகியல் பலரும் தங்களது பதிவை வளைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லவ் டுடே படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி என்பவர் பதிவிட்டுள்ளதாவது, ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு இளம் ஹீரோ காட்சிக்கு (scene) வந்த முதல் படத்திலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக்பஸ்டர் கொடுத்தார். பிரதீப்புடன் அடுத்த படத்தில் இணைய ஆர்வமாக இருக்கிறோம். இந்த குழுவில் இருந்து இன்னும் பல Love Todays தரவேண்டும் என பதிவிட்டிருந்தார்.

இயக்கிய இரண்டாவது படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகி நூறு கோடி வசூல் செய்த பெருமை பிரதீப் ரங்கநாதனையே சாரும், இவரின் அடுத்த படம் எப்போது என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பாகும்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular