Homeசினிமாநீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மலையாள நடிகர்..! யார் தெரியுமா?

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மலையாள நடிகர்..! யார் தெரியுமா?

திரை பிரபலங்கள் பலர் தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது புதிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். இவர் தன் நீண்ட நாள் காதலியை தற்போது திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக உள்ளவர் தான் சுதேவ் நாயர் (Acter Sudev Nair). இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலம் மலையாளத்தில் பிரபல நடிகராகவும் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார். இவர் எளிமையான முறையில் தனது திருமணத்தினை நடத்தியுள்ளார்.

உலக மக்களால் காதல் மாதம் என்று அழைக்கப்படும் மாதம் தான் இந்த பிப்ரவரி. இது பலருக்கு பிடித்த மாதமாகவும் பலருக்கு மறக்க முடியாத மாதமாகவும் இருக்கும். இது போல தான் தற்போது மலையாள நடிகர் சுதேவ் நாயருக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானதாகவும், மறக்கமுடியாத மாதமாவும் உள்ளது.

இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அவற்றில் சில படங்கள் இவருக்கு வெற்றி படங்களாகவும் அமைந்துள்ளது. இந்த வரிசையில் தான் இவர் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான லைஃப் பார்ட்னர் என்னும் திரைப்படம் வெளியானது. இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவருக்கு இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. மேலும் இவர் ஆங்கிலம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Sudev Nair Marriage Photo

இந்நிலையில் தான் தற்போது இவர் திருமணம் (Actor Sudev Nair Marriage) செய்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் தோழியும் மாடலுமான அமர்தீப் கவுரை நேற்று திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரில் நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களுக்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் (Actor Sudev Nair Marriage Photo) சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: Siren Movie Box Office Collection: வசூலை குவித்து வரும் சைரன்..!எத்தனை கோடி தெரியுமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular