Homeசெய்திகள்21 வருடங்களை கடந்த மெளனம் பேசியதே..! இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறது..!

21 வருடங்களை கடந்த மெளனம் பேசியதே..! இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறது..!

கடந்த 2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மெளனம் பேசியதே (Mounam Pesiyadhe). இதில் நடிகையாக த்ரிஷா அறிமுகமானார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பார்.

சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு

 Surya Movie Mounam Pesiyadhe

மெளனம் பேசியதே படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு அவரின் கதாபாத்திரம் யாரும் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத கோணத்தில் அழகாக காட்டிருப்பார் இயக்குனர் அமீர். அதிக அளவு ஆண் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றால் அது சூர்யாவின் கெளதம் கேரட்டர் தான். இந்த படத்தில் அவர் பெண்களை வெறுக்கும், காதலை வெறுக்கும் ஒரு எதார்த்தமாக பேசக்கூடியவனாக அவருடைய கெளதம் கேரட்டர் இருக்கும்.

அதே நேரத்தில் கெளதம் கொஞ்சம் திமிரு பிடித்தவனாகவும், சுயமரியாதையுடன் இருக்கும் ஒரு நபராகவே இந்த படத்தில் வலம் வந்திருப்பார். அவரின் திமிருத்தனமான பார்வை என அனைத்தும் சூர்யாவிற்கு அதிக அளவு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.

Trisha Movie Mounam Pesiyadhe

நண்பனுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய,கெளதம் நண்பன் வேறு ஒரு பெண்ணை காதலிக்க, இதனால் வீட்டில் பார்த்த பெண்னை சந்தித்து திருமணத்தை நிறுத்தச் சொல்லி கெளதம் சந்தியாவை சந்திக்க செல்கிறார். ஆனால் சந்தியா எனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை என சொல்கிறார். அது மட்டுமல்லாமல் நான் கல்யாணம் செய்தால் உன்னை போன்ற ஒருவரை தான் திருமணம் செய்வேன் என குழப்பிவிடுகிறார் சந்தியா.

எதிர்பார்க்காத ட்விஸ்ட்

Laila Movie
Mounam Pesiyadhe

சந்தியா தன்னை காதலிப்பதாக எண்ணி கெளதமும் காதலிக்க, கடைசியில் சந்தியா வேறுறொரு நபரை அறிமுகம் செய்து வைத்து நான் திருமணம் செய்யபோகும் நபர் என்று கூறுகிறார். பெண்கள் மீதும், காதல் மீதும் ஏற்கனவே விருப்பம் இல்லாமல் இருந்த கெளதம் மீண்டும் அந்த நிலைக்கு வருகிறார்.

இந்த படத்தை அங்கேயே இயக்குநர் அமீர் நினைத்திருந்தால் முடித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல் சந்தியா காதலிப்பதாக நினைத்து அவள் தனக்காக என்னவெல்லாம் செய்தாள் என கெளதம் நினைத்தானே அத்தனையும் செய்தது லைலா. கெளதம் கல்லூரி காலத்தில் அவனை ஒருதலையாக காதலிக்கும் லைலா, வருடங்கள் கடந்தும் கெளதமை மறக்காமல் அவனை பின்தொடர்ந்து காதலித்திருக்கிறாள்.

கடைசியில் லைலா தான் இத்தனையும் செய்தது என கெளதம் அறிந்ததும் லைலாவுடன் காரில் ஏறி செல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அனைவருக்கும் ஒரு குழப்பம் இங்கு இருக்கும். சந்தியாவை காதலித்த கெளதம் எப்படி லைலாவுடன் காரில் செல்கிறார் என்று, ஆனால் உண்மையான காதலை கெளதமிற்கு உணர்தியது லைலவின் காதல் தான். அமீர் இந்தப் படத்தை அழகாக இயக்கி இருப்பார்.

இத்தனை வருடங்கள் கடந்தும் (21 Years of Mounam Pesiyadhe) மெளனம் பேசியதே படம், அந்த படத்தின் இசை, பாடல்கள் என அனைத்தும் இன்று இருக்க கூடிய இளைஞர்களையும் ஈர்க்கிறது என்றால் அது இயக்குனர் அமீரின் தனித்துவமான படைப்பு தான்.

மேலும் படிக்க: ரூ.1 லட்சம் செலவு செய்த Ameer எனக்கு பிடிக்காமல் கோபத்தில் எடுத்த முடிவு
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular