Homeசெய்திகள்அடுத்தடுத்து வெளியாக உள்ள கிரிக்கெட் திரைப்படங்கள்..! இத்தனை படங்களா..

அடுத்தடுத்து வெளியாக உள்ள கிரிக்கெட் திரைப்படங்கள்..! இத்தனை படங்களா..

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் கிரிக்கெட் என்றால் செல்லவா வேண்டும். இதுபோன்ற கிரிக்கெட் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

அதேபோல் தற்போது வரை தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் அதிரடியான மற்றும் வித்தியசமான கதைக்களம் கொண்ட படங்கள் அனைத்தும் அதிக அளவில் பேசப்பட்டாலும் ஸ்போர்ட்ஸ் சார்ந்த படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக கிரிக்கெட்டை முக்கிய கதையாக கொண்டு உருவாக்கப்படும் படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்கிறது. இதேபோல் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மைய கதையாக கொண்டு உருவாக்கப்படும் படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் வெளியான ‘சென்னை 600028’ படத்திற்கு பின்னர் கிரிக்கெட் படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகம் பேசப்பட்டது. அதுபோல இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானது அதன் பிறகு கிரிக்கெட் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து கிரிக்கெட் படங்களுக்கான வரவேற்புகள் இந்திய அளவில் அதிகரித்தே உள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட வெளியான படங்கள்

படங்கள் வருடம்
சென்னை 600028 (பாகம் 1)2007
போட்டா போட்டி2011
தோனி2012
ஜீவா2014
சென்னை 600028 (பாகம் 2)2016
M.S தோனி2016
கனா2018
Cricket Based Movies

தற்போது இந்த வரிசையில் இன்னும் சில படங்கள் இணையவுள்ளன. இந்தவகையில் தற்போது கிரிக்கெட்டை மையமாக கொண்டு நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. அவை ரஜினி மற்றும் விஷ்னுவிஷால் இணைந்து நடிக்கும் லால் சலாம், சாந்தனு அசோக் செல்வன் நடிக்கும் புளூ ஸ்டார், மாதவன் நயன்தாரா மற்றும் சித்தார்த் அகியோர் நடித்துள்ள Test மற்றும் ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ள லப்பர் பந்து போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular