Homeவிவசாயம்இயற்கை விவசாயம் சாத்தியமா? குறைந்த முதலீட்டில் அதிக மகசூல் கொடுக்கும் இயற்கை வேளாண்மை..!

இயற்கை விவசாயம் சாத்தியமா? குறைந்த முதலீட்டில் அதிக மகசூல் கொடுக்கும் இயற்கை வேளாண்மை..!

இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மை (Agriculture) என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நம் நாட்டின் வளர்ச்சி கிராமங்களில் தான் உள்ளது என்றார் காந்தியடிகள். அதற்கு காரணம் விவசாயம் கிராமப்புறங்களில் செய்கிறார்கள் என்பதுதான். தமிழகத்தின் “நெற்களஞ்சியம்” என அழைக்கப்படுவது தஞ்சாவூர் மாவட்டம் ஆகும். காரணம் நம் முன்னோர்களின் வாழ்வியல் ஆதாரமாக வேளாண்மை இருந்து வருகிறது.

அறிவியல் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்காத காலங்களிலும் அவர்கள் Vivasayam செய்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் முழுமையாக இயற்கை வேளாண்மையை சார்ந்திருந்தார்கள். ஆனால் இக்காலகட்டத்தில் Iyarkai Velanmai செய்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் உள்ளார்கள். அறிவியல் வளர்ச்சி விவசாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இயற்கை வேளாண்மை என்பது மறைந்து முழுவதும் செயற்கை விவசாயமாக மாறிவிட்டது.

செயற்கை விவசாயத்தின் மூலம் குறைந்த காலத்தில் அதிக மகசூல் பெற முடியும் என்பதற்காக பெருபான்மையான விவசாயிகள் செயற்கை முறையை கடைப்பிடிக்கிறார்கள்.

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

இயற்கை விவசாயம் (Natural Farming) என்பது பயிர்கள் மற்றும் பிற தானிய பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இயற்கையாக கால்நடைகளின் கழிவுகளை உரமாக பயன்படுத்துதல், பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்தல், பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யும் வேளாண்மை ஆகும்.

இயற்கை விவசாயம் செய்வதால் என்ன பலன்Iyarkai Vivasam Benefits in Tamil

கடந்த 2022-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையாடலில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், நாடு முழுவதும் ரசாயனமற்ற இயற்கை விவசாயம் (Organic Farming) ஊக்குவிக்கப்படும் என்றார். இயற்கை விவசாயம் செழிக்க வேண்டும் என்று தமிழக அரசு 1966-ஆம் ஆண்டு பசுமைப்புரட்சியை உருவாக்கியது. இவ்வாறாக மத்திய அரசும் மாநில அரசுகளும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்றன.

குறைந்த செலவில் இயற்கை விவசாயத்தை செய்யலாம். இயற்கை விவசாயத்தில் இடுபொருள்களின் தேவை இருக்காது. இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள கனிமச்சத்துகள் குறையாமல் மண்வளத்தை அதிகப்படுத்துகிறது. மண் வளத்தை அதிகப்படுத்த கால்நடைகளின் கழிவுகளை உரமாக பயன்படுத்துவது மட்டுமல்லாமல், மண்புழு உரத்தையும் பயன்படுத்தலாம்.

பயிர் சுழற்சி முறையில் அதாவது ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல், உதாரணமாக நெல் மட்டும் பயிரிடாமல் கரும்பு, கடலை, சோளம் போன்றவற்றையும் சுழற்சி முறையில் பயிரிடலாம். குறைந்த செலவில் அதிக மகசூல் பெற முடியும் என்பதோடு ஆரோக்கியமான உணவு பொருட்களும் கிடைக்கிறது. இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்கள் (Organic Food) மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயற்கை விவசாயம் செய்வதால் அதன் விளைபொருட்கள் மார்கெட்டில் நல்ல விலைக்கு செல்லும். இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

நம்மாழ்வார் இயற்கை விவசாயம்Nammazhalvar Organic Farming

இன்றைய இளைஞர்களின் மனதில் இயற்கை விவசாயத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல. அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு என்று தான் ஏறும் மேடைகளில் எல்லாம் இயற்கை விவசாயத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தார். அதன் விளைவு இன்று நகரங்களிலும் மாடித்தோட்டம் அமைத்து இயற்கையான முறையில் காய்கறிகளையும், பழங்களையும் அறுவடை செய்கிறார்கள்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular