Homeசினிமாவிஜய் உடனான போட்டி குறித்து மனம் திறந்த சூப்பர் ஸ்டார்..! என்ன கூறினார் தெரியுமா?

விஜய் உடனான போட்டி குறித்து மனம் திறந்த சூப்பர் ஸ்டார்..! என்ன கூறினார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சமீபத்தில் லால் சலாம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ரஜினி காந்த். இந்த லால்சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய் உடனான போட்டி குறித்து அவர் பேசியுள்ளார்.

இந்த லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இந்த படமானது வருகிற 9-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில் தான் லால் சலாம் படத்தில் இசை வெளியீட்டு விழா (Rajini lalsalam audio launch) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தை அடுத்த சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவரும் தங்களது கருத்துகளை கூறினர். இப்படத்தின் இயக்குநர் ஜஸ்வர்யா நடிகர் ரஜினிகாந்த் பற்றி கூறினார். ஐஸ்வர்யாவின் பேச்சைக்கேட்டு ரஜினிகாந்த் கண்கலங்கினார்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் ரஜினிகாந்த் (Rajini lalsalam audio launch Rajini Speech) உரையாற்றினார். அப்போது அவர் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் கூறிய காக்கா – கழுகு கதையை (Rajinikanth Vijay Fans Kaka Kalugu Issue) விஜய்யை குறித்து பேசியதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளனர் என்றும், அது அவருக்கு மிகவும் மனவேதனை அளிப்பதாகவும் கூறி தனது வருத்தத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் விஜய்யை நான் சிறுவயதில் இருந்து பார்க்கிறேன். என்றும் அவர் நிறைய கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்றும் அவர் கூறினார். மேலும் இப்போது அவர் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் கேள்விப்பட்டேன் அதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறி, இவர்களிடேயே போட்டி உள்ளது என்று நீண்ட நாட்களாக உலவி வந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Rajini lalsalam audio launch Rajini Speech
இதையும் படியுங்கள்: சிவகார்த்திகேயனை முன்னோடி என்று கூறிய சூப்பர் ஸ்டார்..! ஏன் தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular