HomeசினிமாIndian 2: உலகநாயகனுக்காக இணையும் சூப்பர் ஸ்டார்... எதற்காக தெரியுமா?

Indian 2: உலகநாயகனுக்காக இணையும் சூப்பர் ஸ்டார்… எதற்காக தெரியுமா?

Indian 2 திரைப்படம், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தயாராகிவருகிறது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தான் Hero என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் முதல் பாகம் 1996-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, நெடுமுடி வேணு, கவுண்டமணி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் 2-ம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. தற்போது இப்படத்தின் இறுதி கட்டபணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் Intro Video வெளியாகவுள்ளது. இந்த இன்ரோ வீடியோவை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான, Super Star Rajinikanth வெளியிடவுள்ளார், என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த Intro Video இன்று மாலை 5.30-க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் உருவாகி வருகிறது, மற்றும் இந்தியன் 2 திரைப்படம் ஒரு Pan Indian Movie-யாக வெளியாகிறது. எனவே இப்படத்தின் இண்ட்ரோ வீடியோவை பிற மொழிகளில் அந்தந்த மொழி பிரபலங்கள் வெளியிட உள்ளனர். அதன்படி மலையாளத்தில் Mohanlal, கன்னடத்தில் Sudeep, பாலிவுட்டில் Aamir Khan ஆகிய பிரபலங்கள் வெளியிட உள்ளனர். இப்படத்தினை Lyca Productions நிறுவனம் தயாரித்து வருகிறது.

Indian 2 Update

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர்களான விவேக், மாரிமுத்து, மனோபாலா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் 2024-ல் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular