HomeசினிமாCoolie Title Reveal: Thalaivar 171 வது படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது…

Coolie Title Reveal: Thalaivar 171 வது படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது…

Coolie Title Reveal: லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துவரும் தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. இந்த தலைவர் 171 வது படத்திற்கு கூலி (Coolie) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்து வரும் படம் தான் வேட்டையன். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்து விட்டது.

வேட்டையன் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் ரஜினியின் 171 படம் என்பதால் தற்காலிகமாக தலைவர் 171 என பெயரிடப்பட்டிருந்தது. நேற்று (22.04.2024) இந்த படத்தின் டைட்டில் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த படத்தின் பெயர் கூலி என வைக்கப்பட்டுள்ளது.

எந்திரன், பேட்ட, தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் படங்களை தொடர்ந்து 6 வது முறையாக ரஜினி நடிக்கும் இந்த கூலி (Rajinikanth Movie Coolie) படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கூலி படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற நான்கு மொழிகளில் வெளியாகி உள்ளது.

நேற்று (22.04.2024) வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தின் டீசர் (Coolie Movie Teaser) மக்கள் மத்தியில் நல்வ வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த டீசரில் கிளாசிக் ரஜினியாந்தை ரசிகர்கள் கண்ணெதிரி மீண்டும் லோகேஷ் கனகராஜ் கொண்டுவறப்போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத்தின் இசை மேலும் சிறப்பை அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.

மேலம் படிக்க: விண்ணைத்தாண்டி வருவாயா? மீண்டும் இணைய உள்ள ஜெஸ்ஸி கார்த்திக் ஜோடி..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular