Homeசினிமாயாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு.. ஆணின் வலியை உணர்த்தும் அழகான வரிகள்..!

யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு.. ஆணின் வலியை உணர்த்தும் அழகான வரிகள்..!

மனிதன் வாழ்க்கையில் அன்பு, பாசம், ஏக்கம், காதல், ஏமாற்றம், இழப்பு இவையனைத்தும் சேர்ந்தது தான் வாழ்க்கை. தமிழ் சினிமாவில் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பல படங்கள் வெளிவந்து மக்கள் மனதில் இன்னும் நீங்காத இடம் பிடித்துள்ளது என்றே கூறலாம். அதிலும் அந்த படங்களில் வரும் உணர்வுப்பூர்வமான பாடல்களும் என்றைக்கும் அழியாத காவியமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்றளவும் மனதை விட்டு அழியாத பாடல் ஒன்றையும், அந்த பாடல் வெளிப்படுத்தும் உணர்வையும் இந்த பதிவில் காண்போம்.

இன்றைய தலைமுறையினர் கூட சற்று தன்னை மறந்து கேட்கும் பாடல்கள் என்றால் அது கட்டாயம் இசைஞாணி இளையராஜாவின் பாடல்களாக தான் இருக்கும். காரணம் அவரின் இசை மக்களின் உணர்வுகளோடு ஒன்றிபோயிருக்கும். அதனால் தான் அந்த உணர்வுகளை இன்றைக்கும் அவரின் இசை மூலம் மக்கள் கேட்டு ரசித்துக்கொண்டுள்ளனர். அவரின் அந்த உணர்வுப்பூர்வமான இசைக்கு மேலும் உயிர் கொடுத்தது பாடல் வரிகள். இந்த இரண்டும் சேர்ந்து கேட்கும் மக்களை மெய்மறக்க செய்கிறது என்றே கூறலாம்.

வைதேகி காத்திருந்தால்

அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து இன்றைக்கும் மக்கள் மனதை விட்டு நீங்காத படம் என்றால் அது வைதேகி காத்திருந்தால் (vaidehi kathirunthal) திரைப்படம். அந்த படத்தில் இடம் பெற்ற ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது.. என்ற பாடல் ஒரு ஆண் தன் துணைவியை இழந்து அந்த வலியில் பாடும் பாடல். இந்த பாடல் காலம் கடந்தும் இன்றைக்கும் நாம் ரசிக்க கூடிய பாடல் அது. ஒரு ஆண் என்பவன் ஒரு பெண்னை சார்ந்து வாழ்பவன். அவன் வாழ்வில் எத்தனையோ பெண்கள் இருந்தாலும், அவன் எந்த ஒரு கெளரவமும் இல்லாமல் இருக்க கூடிய இடம் தான் தாயும், அவனது தாரமும் ஆகும். இந்த இரண்டு பெண்களும் அவன் வாழ்க்கையில் முக்கியமான பெண்களாக இருக்க கூடியவர்கள். இவர் அவனது வாழ்வில் இழந்துவிட்டால் அவனது வாழ்கையை இழந்தவிட்டதாக நினைப்பவன்.

தன் தாயிக்கு பிறகு, தாரம் தன் வாழ்நாள் முழுவதும் வருவாள் என்ற நம்பிக்கையுடன் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்பவன். அந்தவகையில் தன் வாழ்க்கை முழுவதும் இந்த பெண்ணுடன் தான் வாழப்போகிறோம் என்று நினைக்கும் பெண்ணை தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக இழக்கும் ஆணின் வலி மிகவும் கொடுமையானது. அந்த ஆணின் வலியை உணர்த்தும் விதமாக வெளிவந்த பாடல் தான் ராசாத்தி உன்னை காணாத நெஞ்சம் பாடல் (Rasathi unna kanatha nenju Padal). முக்கியமாக அந்த பாடலில் இடம்பெற்ற வரிகள்,

“யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு.. நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு.. வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே”

“அம்மாடி நீதான் இல்லாத நானும்.. வெண்மேகம் வந்து நீந்தாத வானம்.. தாங்காத ஏக்கம்.. போதும்.. போதும்”

இந்த வரிகள் இன்றைக்கும் யாராலும் மறக்க முடியாத வரிகள். இந்த வரிகளில் அவனது துணைவியை அவன் இழந்துவிட்டால், அதுவரை இயல்பாக இருந்த அவன், அவள் சென்றபிறகு இயல்பாக இருப்பதையே மறந்துவிடுவான். யாரிடமும் எதும் பேசாமல் முடங்கி போய்விடுவான். அவளின் நினைவுகள் அவனை ஆட்கொண்டிருக்கும். அதை தான் கவிஞர் வாலி யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு என்று எழுதியிருப்பார்.

அடுத்த வரிகளில் அவள் இல்லாமல் இருக்கும் அவன் மேகம் இல்லாம் ஒரு வானம் போன்றது என அழகாக குறிப்பிட்டிருப்பார். அவளுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டானோ அந்த வாழ்க்கை மீண்டும் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் அதை வாலி மிக அழகாக கூறியிருப்பார். இது போன்று தமிழ் சினிமாவில் அழியாத காதல் காவியங்கள் இருந்துக்கொண்டு தான் உள்ளது.

Rasathi unna kanatha nenju Padal
மேலும் படிக்க: மௌன ராகம் மோகன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்..! ஹரா அப்டேட்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular