மாறுபட்ட தோற்றங்கள் மற்றும் மாறுபட்ட கதைக்களம் என புதுமைக்கு பேர் போனவர் தான் நடிகர் விக்ரம். இவர் நடித்து இறுதியாக வெளியான படம் தான் பென்னியின் செல்வன். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் தங்கலான் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்குகிறார் மேலும் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். கடந்த ஓராண்டாக தங்கலான் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது கேஜிஎஃப்பில் வாழும் பூர்வகுடி தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது.
அதன் பிறகு குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. ஜனவரி 26-ம் தேதி சில காரணங்களால் தங்கலான்
படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பின்னர் இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாக உள்ளது என்ற தகவல் (Thangalaan Padathin Release Date) வெளியானது.ஆனால் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் 26-ம் தேதி தங்கலான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் (Thangalaan Movie Release Date) வெளியாகியுள்ளது. இது காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: தளபதி 69 படத்தில் மீண்டும் இணைகிறார்களா விஜய் திரிஷா..! வெளியான சூப்பர் அப்டேட்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…