Homeசெய்திகள்இந்தியாRepublic Day History in Tamil..! குடியரசு தின வரலாறு..!

Republic Day History in Tamil..! குடியரசு தின வரலாறு..!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா (Republic Day History in Tamil) கொண்டாடப்படுகிறது. அன்று டெல்லியில் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும். டெல்லியில் குடியரசு தலைவர் இந்திய இராணுவ வீரர்களுக்கு முன்பாக கொடியேற்றுவார். அதுசமயம் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அந்த மாநிலத்தின் காவல்துறையினர் முன்னிலையில் கொடியேற்றுவார். பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் அன்று கொடியேற்றப்படும். டெல்லியில் குடியரசு தலைவர் கொடியேற்றிய பின்பு சிறப்பாக பணியாற்றிய இராணுவ அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்குவார்.

நாம் எவ்வாறு சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாடுகிறமோ, அதுபோல தான் நாம் அனைவரும் குடியரசு தின விழாவையும் கொண்டாட வேண்டும். இங்கு பலருக்கும் சுதந்திர தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது என்று கேட்டால் யோசிக்காமல் சரியாக கூறிவிடுவார்கள். ஆனால் குடியரசு தின விழா எப்போது என்று கேட்டால் உடனடியாக யாரும் சொல்லுவதில்லை. காரணம் குடியரசு தினவிழா-வை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாதது தான்.

நாம் இந்த பதிவில் குடியரசு தின விழா என்றால் என்ன? (kudiyarasu thina vizha varalaru in tamil) மற்றும் அதனை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை (Republic Day 2024 in Tamil) பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குடியரசு தின விழா என்னறால் என்ன? Republic Day Celebration in Tamil?

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருந்தால் தான் இந்தியா முழுமையாக சுதந்திரம் அடைந்துவிட்டதாக உணரமுடியும் அதுதான் ஜனநாயகம் என அழைக்கப்படும். மக்களே தங்களை ஆள்பவர்களை தேர்வு செய்யும் அமைப்பு ஜனநாயகம் எனப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அமைப்பு குடியரசு எனப்படும்.

குடியரசு தின விழா ஏன் கொண்டாடுகிறோம்? – Republic Day History in Tamil

இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்த நாளை தான் நாம் குடியரசு தின விழாவாக கொண்டாடுகிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947 ஆகஸ்ட் 8-ம் தேதி டாக்டர். அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க தொடங்கியது. சரியாக 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இருந்தபோதிலும் இந்த சட்டம் 1950 ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த நாளில் அறிவிக்கப்பட்டதற்கான காரணம் மகாத்மா காந்தி 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிக்கப்படாத லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுதந்திரத்திற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி சுதந்திர நாளாக அனுசரிக்க காந்தியடிகள் அறிவுறுத்தினார். இந்நிலையில் காந்தியடிகள் அறிவித்த 1930, ஜனவரி 26 தேதியை அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்த பண்டித ஜவஹர்லால் நேருவின் அரசு முடிவு செய்தது. அந்நாளை தான் இந்தியாவின் குடியரசு தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் குடியரசு தின விழாkudiyarasu thina vizha in tamil

Republic Day History of in Tamil

டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இராணுவ வீரர்களுக்கு முன்பு கொடியேற்றுவார். பிறகு சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களை வழங்குவர். குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த அலங்கார ஊர்தி நிகழ்ச்சியில் பங்குபெறும் மாநிலங்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் அந்த மாநிலங்களின் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு படைகளின் தளபதியான இந்திய குடியரசு (India Republic day in tamil) தலைவர் அணிவகுப்பில் அளிக்கப்படும் மரியாதையை பெற்றுக்கொள்வார். இந்நிகழ்வில் இந்திய பிரதமர் மற்றும் மற்ற நாடு அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார்கள்.

மேலும் படிக்க: 75-வது குடியரசு தின விழாவில்..! தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி..!

Republic Day – FAQS

1. இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?Who is the first president of India?

ராஜேந்திர பிரசாத் 1950 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார்.

2. இந்திய குடியரசு தினத்தின் தந்தை யார்? Who is the father of Indian Republic Day?

இந்தியாவின் குடியரசு தினத்தின் தந்தை டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவார்.

3. குடியரசு தினத்தன்று ஏன் அணிவகுப்பு நடத்தப்படுகிறது? Why parade is done on Republic Day?

ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் தேசபக்தியின் அவசரத்தை உணர குடியரசு தின அணிவகுப்பைக் காண்கின்றனர். தேசியக் கொடிகளை அசைப்பதும், தேசிய கீதம் பாடுவதும் அரசியலமைப்பு உரிமைகளை மதிக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் அனைவருக்கும் நினைவூட்டுகிறது.

மேலும் படிக்க: 75 வது குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular