Homeசினிமா70 விருதுகளை வென்ற சரஸ் குறும்படத்தின் விமர்சனம்..! Saras Short Film Review..!

70 விருதுகளை வென்ற சரஸ் குறும்படத்தின் விமர்சனம்..! Saras Short Film Review..!

20 சர்வதேச திரைப்பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது சரஸ் எனும் குறும்படம். இப்படத்தினை Jude Peter Damian என்னும் இயக்குநர் இயக்கியுள்ளார். இவர் முதலில் Chartered Accountant ஆக பணிபுரிந்தவர் ஆவார்.

இந்த Saras குறும்படம் இவருக்கு 2-வது திரைப்படம் ஆகும். இதற்கு முன் இவர் ‘சஷ்தி’ எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த சஷ்தி திரைப்படம் அரைமணி நேரப் படம் ஆகும். இப்படத்தில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த சஷ்தி குறும்படம் கடந்த ஆண்டு 35 சர்வதேச பட விழாக்களில் 75-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றது.

இப்படத்தினை தொடர்ந்து தற்போது ‘சரஸ்’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நீலிமா ராணி, என்.ஸ்ரீகிருஷ்ணா, வினைதா சிவகுமார், மாஸ்டர் சஞ்சீவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. Saras Movie Review இப்பதிவில் பார்க்கலாம்.

இப்படத்தின் கதைக்களம், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியை கொண்ட பெண் தான் சரஸ்வதி (சரஸ்), இவர் நன்கு படிக்கும் தன் மகனை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் எப்படி படிக்க வைக்க தீர்மானமாயிருக்கிறாள் என்பது பற்றி இக்கதை சொல்கிறது.

Saras Short Flim

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.டி.ராஜா ஆவார். இப்படத்திற்கு திரு. எம்.எஸ்,ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி இசையமைத்துள்ளார், திரு.எஸ்.டி.பி சாமி லைவ் ரெக்கார்டிங் செய்துள்ளார். திரு.சிவகுமார் மோகனன் நிர்வாக தயாரிப்பாளராகவும் திரு குண்டல் ஆர்.பாபு படத்தொகுப்பாளராகவும் இருந்துள்ளனர். இந்த ‘சரஸ்’ குறும்படம் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர்: ஜூட் பீட்டர் டேமியான்

ஒளிப்பதிவாளர்: ஜி.டி.ராஜா

இசையமைப்பாளர்: எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்

தயாரிப்பாளர்: சிவகுமார் மோகனன்

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் திரைப்படத்தின் விமர்சனம்
Saras

Director: Jude Peter Damian

Date Created: 2023-02-25 12:00

Editor's Rating:
4.5
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular