Homeசினிமாஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும்..! அதிர்ச்சியில் Simbu ரசிகர்கள்..!

ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும்..! அதிர்ச்சியில் Simbu ரசிகர்கள்..!

சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் அவரது 48 வது திரைப்படம் ஆகும். இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் இப்படத்தின் ஷூட்டிங்கு இன்னும் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சிம்பு கொடுத்த கம்பேக்

சில ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்புக்கு சரியாக வரவில்லை, பணம் வாங்கிவிட்டு ஷூட்டிங்கு வரவில்லை என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சிம்புக்கு பல படங்கள் சொல்லிகொள்ளும் அளவிற்கு வெற்றிபெற வில்லை. அதன் பிறகு மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த Silambarasan TR அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிரார்.

Simbu Movie

மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார், இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் STR நடித்த பத்து தல படமும் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்கள் கொடுத்தார் Silambarasan.

எஸ்டிஆர் 48 வது படம்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் நடுக்க இருக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளது. தேசிங்கு பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு இயக்கும் எஸ்டிஆர் 48 படத்தில் வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகளும் உள்ளன என கூறப்படுகின்றன.

STR Upcoming Movies

STR 48 படத்தின் லேட்டஸ்ட் அப்பேட் என்னவென்றால் இப்படத்தின் ஷூட்டிங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் ஆரம்பிக்கப்படும் என் கூறப்படுகிறது, எனவே 2025 ஆண்டு தான் படம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடக்க இருந்த படமும் டிராப் ஆக உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதனால் Simbu Padam வெளியாக ஓராண்டாகும் என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular