HomeசினிமாSK 21 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவல் வெளியானது..! ரிலீஸ் எப்போ தெரியுமா?

SK 21 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவல் வெளியானது..! ரிலீஸ் எப்போ தெரியுமா?

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை அவர் தந்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவருடைய அடுத்தபடமாக SK 21-ல் நடித்து வருகிறார். தற்போது இப்படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இத்திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது திரைப்படமாகும்.

இப்படத்தை Sony Pictures மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன் இப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு 2022-ம் ஆண்டு வெளியானது. முதலில் இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதன்பிறகு சாய் பல்லவி கதாநாயகியாக நடிப்பதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர்.

இப்படத்தில் வில்லனாக விஸ்வரூபம் படத்தில் நடித்த ராகுல் போஸ் நடித்துள்ளார். ராணுவ அதிகாரியாக நடித்துள்ள சிவகார்த்திகேயனை வில்லத்தனத்தில் ராகுல் போஸ் திணறவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

SK 21 Movie Update

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் தரமாக உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது SKவின் 23வது படமாகும்.

இந்நிலையில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம், பல தடைகளையும் தாண்டி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அயலான் படத்தின் ரிலீஸ் மற்றும் எஸ்.கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாக இருப்பதால், SK ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular