Homeசினிமாதிருநங்கையாக மாறிய ஜி.பி.முத்து.. பிக் பாஸ்க்கு பிறகு அடுத்த அவதாரம்..!

திருநங்கையாக மாறிய ஜி.பி.முத்து.. பிக் பாஸ்க்கு பிறகு அடுத்த அவதாரம்..!

G.P. Muthu என்ற பெயரை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது. YouTube மூலம் பிரபலமானவர் ஜி.பி. முத்து. இவரின் நகைச்சுவைக்கும், வெகுளித்தனமான பேச்சுக்கும் ரசிகர்கள் அதிகம்.

இவர் தூத்துக்குடியில் 1985-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி பிறந்தார். இவர் YouTube-ல் வணக்கம் நண்பர்களே என்று சொல்லும் டயலாக் மிகவும் பிரபலம்.

இதனைத் தொடர்ந்து Vijay TV-ல் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான Bigg Boss நிகழ்ச்சியில் 6-வது சீசனில் கலந்துக்கொண்டு மேலும் பிரபலம் ஆனார். இந்த நிகழ்ச்சியில் இறுதிவரை செல்வார் என எதிர்ப்பார்த்த நிலையில் திடீரென தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

ஆனாலும் இவரின் ரசிகர் பட்டாளம் மட்டும் குறையவே இல்லை. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு துணிவு மற்றும் பம்பர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

GP Muthu New Movie

அதுமட்டுமின்றி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்துள்ளார். தற்போது அவர் அடுத்த பரிமாணமாக ஆர்வன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் ஒரு திருநங்கை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது அப்படத்தின் போஸ்டர் இணையதளத்தில் வைரல் ஆகிவருகிறது. இப்படத்தினை மணி ஆரவ் இயக்கி வருகிறார்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular