செய்திகள்

தமிழ்நாட்டில் பிறை தென்பட்டது.. ரம்ஜான் பண்டிகை 2024 எப்போது?

இஸ்லாமியர்களின் காலண்டர் கணக்குப்படி 9-வது மாதம் ஒவ்வொரு வருடமும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களுக்கு முக்கிய பண்டிகையாக பார்க்கப்படுகிறது. இந்த ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக ஒரு மாதம் காலம் நோன்பு (Ramadan Nombu 2024) இருப்பார்கள்.

ரமலான் நோன்பு காலத்தில் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக அதாவது விடியற்காலை உணவு அருந்திவிட்டு மாலை சூரியன் மறையும் வரை தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இது இஸ்லாமியர்களின் மரபாகும். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஒரு முக்கிய பண்டிகையாக இந்த ரம்ஜான் பண்டிகை (Ramzan Pandigai 2024) கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் எனப்படும் பெருநாள் பண்டிகை வானில் பிறை தென்படுவதன் அடிப்படையில் கொண்டாடப்படும். இந்நிலையில் தமிழகத்தில் ரமலான் பண்டிகையின் நோன்பு காலத்தின் 29-வது நாள் அல்லது 30-வது நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டின் ரம்ஜான் பண்டிகை எப்போது என்று அனைவரும் எப்போது என்று எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் தமிழகத்தில் பிறை (Ramadan Nombu Date 2024 in TN) தென்படவில்லை.

இதனால் ரம்ஜான் பண்டிகை (Ramzan festival in 2024 TN) தேதி குறித்த அறிவிப்பை அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பிறை தென்படாததால் ரம்ஜான் பெருநாள் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி (11/04/2024) தமிழகம் மற்றும் புதுவையில் கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பிறை தென்பட்டதாகவும், இதனால் ரம்ஜான் பெருநாள் (10/04/2024) கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏற்கனவே பிறை தென்படவில்லை என்று அறிவிப்பு செய்திருந்தோம். இந்த நிலையில் கோவை – சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி – வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக செய்தி வந்தது அதை சற்று முன் விசாரித்து உன்மை என்று உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிறை அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிடுகிறது.

தமிழகத்தில் ஷவ்வால் மாதம் மற்றும் நோன்புப் பெருநாள் பற்றிய அறிவிப்பு. பிறை தேட வேண்டிய நாளான 09.04.2024 செவ்வாய்க் கிழமையன்று தமிழகத்தின் கோவை – சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி – வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 09.04.2024 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது என்பதையும் 10.04.2024 புதன்கிழமை நோன்பு பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

மேலும் படிக்க: Ramadan wishes in Tamil 2024: ரம்ஜான் வாழ்த்துக்கள் 2024..!
மேலும் படிக்க: Ramadan 2024: இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடக்கம்..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago