சமையல் குறிப்புகள்

Ulunthankali Recipe: ஊட்டம் தரும் உளுந்தங்களி… ஈசியாக செய்வது எப்படி?

Ulunthankali Recipe: நம் உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவு பழக்க வழக்கங்களை தான் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். ஆனால் அந்த உணவு முறைகள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போது இதன் காரணங்களால் தான் அனைவருக்கும் சிறு வயதிலேயா உடல் சேர்வு, வழி போன்றவை ஏற்படுவகிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவில் உளுந்து சேர்த்துக்கொண்டால் உடல் வலிமை பெரும். உளுந்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.

உளுந்து மிகவும் அதிகம் இரும்பு சத்துள்ள உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய தானியம் ஆகும். பெண்கள், குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், விவசாயம் செய்பவர்கள் போன்ற உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள் இந்த உளுந்தங்களி (Ulunthankali) செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த உளுந்து களியை வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது செய்து சாப்பிட வேண்டும்.

உளுந்தங்களி மிகவும் நார்ச்சத்து நிறைந்தது ஆகும். நம் முன்னோர்கள் உண்ட உளுந்தங்களி போல் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய சுவையான உளுந்தங்களி செய்வது எப்படி (Ulunthankali Recipe in Tamil) என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உளுந்தங்களி செய்வது எப்படி (How To Make Ulunthankali) Ulunthankali Recipe

உடலுக்கு அதிகமான இரும்பு சத்து தரக்கூடிய உளுந்தங்களி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த உளுந்தங்களி செய்ய தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள் (Ulunthankali Ingredients)

  • உளுந்து (உடைத்த உளுந்து) – 1 கப்
  • அரிசி – 2 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் அல்லது கருப்பட்டி (பொடியாக்கவும்) – 1 கப்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • தேங்காய் (துருவியது) – தேவையான அளவு
  • ஏலக்காய் – சிறிதளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை (Ulundhu kali Seivathu Eppadi)

  • அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் உளுந்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதேபோல அரிசியையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • உளுந்து மற்றும் அரசி ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் அல்லது கருப்பட்டி மற்றும் அதில் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.
  • அதில் அரைத்த உளுந்து மற்றும் அரிசி மாவை சேர்த்து கட்டி விழாமல் கரண்டி கொண்டு கிளரவேண்டும்.
  • அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். அடி பிடிக்காத வகையில் கைவிடாமல் கிளறி விட்டு கொண்டே இருக்க வேண்டும்.
  • அதன் பிறகு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • அதன் பிறகு உளுந்து களி நன்கு வெந்த பிறகு பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும். அதன் பிறகு கையில் தண்ணீர் நினைத்து உளுந்தங்களியை உருண்டையாக உருட்டி வைக்கவும். தற்போது சுவையான உளுந்தங்களி தயார்.

உளுந்தங்களி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் (Benefits of Ulunthankali)

  • நாம் உளுந்தங்களி சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குடலில் இருக்கின்ற நச்சுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்.
  • உளுந்தங்களி சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
  • உளுந்தங்களி சாப்பிடுவதால் இடுப்பு வலி சரியாகும் என கூறப்படுகிறது.
  • வாரம் ஒரு முறை உளுந்தங்களியை சாப்பிட்டால் சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும் என கூறப்படுகிறது.
  • விளையாட்டு வீரர்கள் உளுந்து களி சாப்பிடுவதால் எளிதில் சோர்வடையாமல் அதிக நேரம் செயலாற்றும் திறனை கொண்டிருக்க முடியும்.
Ulunthankali Recipe: ஊட்டம் தரும் உளுந்தங்களி… ஈசியாக செய்வது எப்படி?

உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உளுந்தங்களியை (Ulunthankali Recipe in Tamil) செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.

Type: Appetizer

Cuisine: Tamil Nadu

Keywords: Ulunthankali Recipe, How To Make Ulunthankali

Recipe Yield: 4

Preparation Time: PT10M

Cooking Time: PT30M

Total Time: PT40M

Recipe Ingredients:

  • Uludu (broken Ulu) – 1 cup
  • Rice – 2 Tablespoon
  • Jaggery or blackcurrant (powdered) – 1 cup
  • Water – required quantity
  • Coconut (grated) – as required
  • Cardamom – a little
  • Ghee – required quantity
Editor's Rating:
4.5
மேலும் படிக்க: அடிக்கிற வெயிலுக்கு சுவையான வெள்ளரிக்காய் ஜூஸ்..! 5 நிமிடத்தில் செய்வது எப்படி?
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago