Homeசினிமாவல்லவன் படத்தின் வசூல் இத்தனை கோடியா...! எவ்வளவு தெரியுமா?

வல்லவன் படத்தின் வசூல் இத்தனை கோடியா…! எவ்வளவு தெரியுமா?

STR என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சிம்பு பல வெற்றப்படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். வித்தியாசமான கதையினை தேர்வு செய்து நடிப்பவர். இவர் சிறுவயது முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் 1984-ம் ஆண்டு வெளியான உறவை காத்த கிளி எனும் திரைபடத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 1995-ம் அண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மேலும் 2002-ம் ஆண்டு வெளிவந்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அன்று முதல் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு தந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகும் படங்கள் கோடி கணக்கில் வசூல் செய்வது என்பது அவ்வளவு பெரிதாக தெரிவது இல்லை. ஆனால் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு படம் கோடி கணக்கில் வசூல் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அப்போதே சிம்புவின் வல்லவன் படம் கோடி கணக்கில் வசூலை செய்துள்ளது.

2006-ம் ஆண்டு சிம்பு இயக்கி தானே கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் வல்லவன். இத்திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் சிம்பு, கதாநாயகியாக நயன்தாரா நடித்திருப்பார். மேலும் சந்தானம், ரீமா சென், சந்தியா, சத்யன், பிரேம்ஜி, எஸ்.வி.சேகர் எனப் பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் மட்டுமின்றி பாடல்களும் பெரும் ஹிட்டானது.

Simbu

தற்போது வல்லவன் படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சிம்பு ரசிகர்கள் இப்படத்தின் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது, என்னவென்றால் படத்தின் வசூல் தான். ஆம் 17 வருடங்களுக்கு முன்பே வல்லவன் திரைப்படம் உலக அளவில் 25.15 கோடி வசூல் செய்யதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular