HomeசினிமாVijay Sethupathi எடுத்த முடிவு.. சில வருடங்கள் நடிக்க மாட்டேன்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Vijay Sethupathi எடுத்த முடிவு.. சில வருடங்கள் நடிக்க மாட்டேன்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக பல முன்னணி நடிகர்களுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

Vijay Sethupathi தென்னிந்திய திரையுளகில் கடந்த சில ஆண்டுகளில் அதிக படங்கள் நடித்தவராக கருதப்படுகிறார். இவர் தொடக்கத்தில் சிறு சிறு வேடங்களில் தான் நடித்தார், பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் 2010 ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இதன் பிறகு த்ரில்லர் படமான பீட்சா, நகைச்சுவை படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நன்றாக அறிமுகமானார்.

இதன் பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நானும் ரௌடி தான், இமைக்கா நொடிகள் மற்றும் காத்துவாக்குள இரண்டு காதல் படத்திலும், திரிஷா உடன் இணைந்து 96 படத்திலும் நடித்துள்ளார் Actor Vijay Sethupathi.

இவர் ஹீரோவாக பல படங்களில் நடித்தாலும் அதில் சில படங்கள் குறிப்பிட்ட அளவு வெற்றி பெறவில்லை. இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும், வில்லனாகவும் நடித்துள்ளார்.

Vijay Sethupathi

இவர் தமிழில் முக்கிய நடிகர்களான ரஜினி நடித்த பேட்ட, கமல் நடித்த விக்ரம், விஜய் நடித்த மாஸ்டர் போன்ற படங்களிலும் சமீபத்தில் இந்தியில் வெளியான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த படங்கள் எல்லாம் நல்ல ஹிட் அடித்தது.

இனி வில்லனாக நடிக்க மாட்டேன் Vijay Sethupathi முடிவு

முன்னணி ஹீரோவாக இருந்தும் விஜய் சேதுபதி மற்ற நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்தார். ஆனால் அதுவும் ரசிகர்களுக்கு பிடித்தது. இந்த நிலையில் சில ஆண்டுகள் வில்லனாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது குறித்து விஜய் சேதுபதி கூறியதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

வில்லனாக நடிப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளன. ஹீரோவை விட வலுவாக தெரிய கூடாது என்பதற்காக கவனமாக நடிக்க வைப்பார்கள். ஹீரோ கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக வில்லனாக நான் நடித்த காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டுள்ளன. எனவே இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துள்ளார்.

மேலும் படக்க: Boys Movie -ல் நடித்த நடிகர்களின் தற்போதைய நிலை.
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular