Homeசெய்திகள்ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு… அதிர்ச்சி தகவல்..!

ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு… அதிர்ச்சி தகவல்..!

நாம் அனைவரும் நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை தரவே விரும்புவோம். அந்த வகையில் அனைத்து வீடுகளிலும் குழந்தைகளுக்கு தினமும் காலை பால் குடிப்பதற்கு தருவார்கள். அனைவரும் டீ, காபி குடிக்காமல் அவர்களின் காலை பொழுதை கடப்பதே இல்லை. நகர்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு பால் கிடைக்க செய்யும் ஆவின் பால் (Aavin Milk) நிறுவனத்தில் தற்போது பால் தட்டுப்பாடு ஏற்டபட்டு வருகிறது.

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது அதிகரித்து வருகிறது. முக்கிய நகரங்களில் உள்ள பல இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்த கோடை வெயில் காரணமாக மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து விலங்குகளும் பாதிப்படைந்து வருகிறது.

இந்த வெப்ப அளவு அதிகரிப்பால் தமிழகத்தில் உள்ள ஆவின் பால் (Aavin Milk) கொள்முதலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி கொள்முதல் செய்யப்படும் அளவில் சராசரியாக 3 லட்சம் லிட்டர் வரை குறை (Aavin Milk Purchase) ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் நிறுவனத்தில் பிப்ரவரி மாதத்தில் தினசரி சராசரியாக 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த பாலின் கொள்முதல் (Aavin Paal Thattupadu) அளவு தற்போது 26 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இனிவரும் நாட்களில் கோடை வெப்பம் இன்னும் அதிகரிக்கும் எனவே பால் கொள்முதல் அளவு இன்னும் சரிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Aavin Milk Purchase have decreased

பால் கொள்முதல் அளவு குறைவு காரணமாக வரும் காலங்களில் பால் விற்பனை மட்டுமின்றி கோடை காலத்திற்கான ஐஸ்கிரீம், பால்கோவா மற்றும் பால் சார்ந்த இனிப்பு பொருட்களின் உற்பத்தியிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என தொழில் துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு காரணமாக Aavin பால் நிறுவன அதிகாரிகள் கூறுவது என்னவென்றால் கோடை வெப்பத்தின் காரணமாக கால்நடைகளின் பால் கறக்கும் திறன் குறைந்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்பும் தருமபுரி மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதால் பால் கொள்முதலில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையை சரி செய்ய எங்கள் நிறுவனம் தயாராகிவிட்டோம். எங்களிடம் போதுமான அளவு பால் பவுடர் கையிருப்பில் உள்ளன எனவும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க: சுவையான குலு குலு பாதாம் பால் செய்வது எப்படி..! ஈஸியா செய்யலாம் வாங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular