Homeசெய்திகள்AC Helmet for Traffic Police: போக்குவரத்து காவலர்கள் கவலை போக்கும் ஏ.சி ஹெல்மெட்..!

AC Helmet for Traffic Police: போக்குவரத்து காவலர்கள் கவலை போக்கும் ஏ.சி ஹெல்மெட்..!

கோடை காலம் வந்தால் அனைவரும் நிழல் தரும் மரங்கள் எங்கு உள்ளது என தேடி தேடி போய் நிற்போம். ஆனால் மரத்தின் நிழலில் நிற்காமல் சாலையில் போகும் மக்கள் அனைவரும் விதி மீறாமல் பயணிக்க வழிநடத்தும் போக்குவரத்து காவலர்களை வெயிலில் இருந்து காப்பது யார்? கோடை வெயிலில் இருந்து போலீசார் தப்பிக்க போக்குவரத்துக் காவல்துறை ஏசி ஹெல்மெட் (AC Helmet) வழங்கியுள்ளது.

நாட்டின் பல நகரங்களில் கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்றாக தற்போது ஏசி ஹெல்மெட் (AC Helmet for Traffic Police) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கோடை வெயிலை சமாளிக்க குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் சாலை போக்குவரத்து போலீசாருக்கு (Pokkuvarathu Kavalaigal) ஏசி ஹெல்மெட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏசி ஹெல்மெட்டை அணிவதன் மூலம் அதிகப்படியான வெயிலில் இருந்து போலீசார் அவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இந்த ஏசி ஹெல்மெட் ஆனது பேட்டரியில் இயங்கக்கூடிய ஆகும். அந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இந்த ஹெல்மெட்டை குஜராத் மாநிலத்தில் உள்ள ஐஐஎம் மாணவர்கள் தான் போலீசாருக்கு உருவாக்கி கொடுத்துள்ளார்கள். முதற்கட்டமாக 450 சாலை போக்குவரத்து போலீசாருக்கு இந்த ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.

Pokkuvarathu Kavalaigal
மேலும் படிக்க: கோடைகாலத்தில் வெயிலை விட அதிகரிக்கும் AC மின் கட்டணம்… செலவை குறைக்க எத்தனை Ton AC வாகங்க வேண்டும்…
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular