Homeசினிமாநடிகர் பார்த்திபனின் மகள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா..! வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

நடிகர் பார்த்திபனின் மகள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா..! வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் மற்றும் பல இயக்குனர்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் பார்த்திபன். இவர் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்துவார். இவர் இயக்குனர் மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராகவும் உள்ளார். இந்நிலையில் இவர் இப்போது டீன்ஸ் எனும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

படங்களை வித்தியாசமான கோணத்தில் எடுப்பதில் இவருக்கு நிகர் இவர் தான் என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு இவரது படங்கள் மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும். இந்த படத்திற்கு முன்பு இவர் இயக்கி நடித்து வெளியான ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் ஆகிய இரு திரைப்படங்களும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்து இருந்தது. அதேபோல் தான் இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1990-ம் ஆண்டு அப்போது பிரபல நடிகையாக இருந்த சீதாவை பார்த்திபன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமாகி 10 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2001-ம் ஆண்டு விவாகரத்து செய்துக்கெண்டனர்.

பார்த்திபன் மற்றும் சீதாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இவர்களுடைய மகள் கீர்த்தனாவை அனைவருக்கும் கண்டிப்பாக தெரிந்து இருக்கும். இவர் இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிடடால் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். இந்த படம் இவருக்கு வெற்றியை கொடுத்தாலும் அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை.

Parthiban Family Photos

இவரை தவிர்த்து பார்த்திபனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மொத்தம் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆவார். இவரது மற்றெரு மகளின் பெயர் அபிநயா மற்றும் இவரது மகனின் பெயர் ராக்கி ஆகும். இந்நிலையில் தான் தற்போது நடிகர் பார்த்திபன் தன் மூன்று குழந்தைகளுடன் (Actor Parthiban Babys) எடுத்துக்கொண்ட புகைப்படம் (Parthiban Family Photos) சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: குக் வித் கோமாளியின் புதிய நடுவராக பிரபல தமிழ் படத்தின் கதாநாயகன்..!



Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular