Homeசினிமாவெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதன் காரணமாக இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளமும் அதிகரித்துள்ளது. அதுபோல தான் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி சமந்தா 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமையவில்லை. மேலும் சமீபத்தில் இவர் லீட் ரோலில் நடித்து வெளியான யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தோல்வியை தழுவியது.

இதுபோன்ற தொடர் தோல்விக்கு பிறகு இறுதியாக சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் காதல் ஆக்ஷன் இரண்டும் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருந்தாலும் குஷி படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே வந்தது.

இது போன்ற தொடர் தோல்விகள் காரணத்தால் அவதிப்பட்டு வரும் சமந்தா விரைவில் ஒரு சூப்பர் படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது சமந்தா பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் (Actress Samantha Salary Per Movie) வெளியாகியுள்ளது.

Actress Samantha Salary Per Movie

இந்த தகவலின் படி புஷ்பா படத்தில் மாபெரும் வெற்றிப்பெற்ற பாடலான ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா நன்றாக நடித்து இருப்பார். இந்த பாடலுக்கு 5 நிமிடம் நடனம் ஆடிய சமந்தாவுக்கு ரூ.5 கோடி சம்பளம் (Actress Samantha Salary) வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular