Homeசினிமாஅமலா பாலின் தம்பியும் ஒரு நடிகரா? வைரலாகும் புகைப்படம்..!

அமலா பாலின் தம்பியும் ஒரு நடிகரா? வைரலாகும் புகைப்படம்..!

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். அதன் பிறகு அவர் மைனா என்னும் படத்தில் நடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத் திருமகள் அதன் பிறகு தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை, பின்னர் சூர்யாவுடன் பசங்க 2 என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவரும் 2017-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியான அமலாபால் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு தான் கடந்த நவம்பர் மாதம் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஜகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் பகிர்ந்திருந்தார்.

நம்மில் பலரும் அமலா பாலின் குடும்பத்தினரை பெரிதாக வாய்ப்பில்லை. அமலா பாலுக்கு அபிஜித் பால் (Abhijeet Paul) என்று ஒரு தம்பி உள்ளாராம். சில மாதங்களுக்கு முன்பு கூட தம்பியின் திருமண புகைப்படங்களை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தான் (Actress Amala Paul Brother) அபிஜித் பால் ஒரு மலையாள நடிகர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் தான் தற்போது அமலா பால் தனது பெற்றோர் அனீஸ் பால் மற்றும் பால் வர்கீஸ் மற்றும் தம்பியுடன் எடுத்துக்கொண்ட பழைய பேமிலி கிளிக் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Actress Amala Paul Brother
இதையும் படியுங்கள்: முடிவுக்கு வரும்னு தெரியும்..! ஆனால் மனசு வருத்தமா இருக்கு..! நடிகை மகாலட்சுமி..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular