Homeசெய்திகள்வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடுங்க..! அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி..!

வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடுங்க..! அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி..!

மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 2 முதல் 4 ஆகிய தேதிகளில் மிக அதி கனமழை பெய்தது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அந்த 4 மாவட்டங்களுக்கு Red Alert கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்தர் (Meteorological Center Officer S. Balachander) செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் ரெட் அலர்ட் நீட்டிக்கப்படுவதாக (Extension of Red Alert in Southern Districts) தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது மிக்ஜாம் புயலை சரியாக உரிய நேரத்தில் சொன்ன வானிலை ஆய்வு மையம் தென்மாவட்டங்களில் பெய்த மிக அதி கனமழையை (South district rain floods) பற்றி சரியான தகவலை கொடுக்கவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் பிரதமரை சந்திக்க சென்ற முதல்வரும் டெல்லி செய்தியாளர்கள் சந்திப்பில் வானிலை ஆய்வு மையம் உரிய நேரத்தில் தகவலை சொல்லவில்லை அதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறினார்.

இந்நிலையில் நேற்று நெல்லை ராஜகோபாலபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கிய பாமக தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வெளிநாடுகளில் உள்ள வானிலை ஆய்வு மையம் போன்று ஏன் சென்னையில் இல்லை. நவீன வசதிகளுடன் சென்னை வானிலை ஆய்வு மையம் இருக்கிறது என அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் ஏன் துல்லியமாக ஒரு அறிக்கையை சரியாக கூற முடியவில்லை. அப்போ எதுக்கு வானிலை ஆய்வு மையம் இழுத்து மூட வேண்டியது தானே என கோபமாக பேசினார்.

இனிவரும் காலங்கள் எல்லாம் இது போன்ற இயற்கை பேரிடர்கள் வரும். அவ்வாறு இருக்கும் போது இந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும், இந்த மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என்று கூறுவது எல்லாம் சரியான கணிப்பாக இருக்க முடியாது. சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகின்றது இன்னும் இந்த நிலையிலேயே வானிலை அறிக்கை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என செய்தியாளர்களிடம் கோபமாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க எனக்கு அரசியல் பேச தெரியாது..! வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலசந்தர் பேட்டி..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular