HomeHow toபிறந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Aadhaar Card for...

பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Aadhaar Card for Child in Tamil..!

ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு தனிமனித அடையாள அட்டை ஆகும். இன்றைய காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து இந்தியா்களிடமும் ஆதார் கார்டு உள்ளது. ஆனால் நம் வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கும் ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாக தேவைப்படுகிறது. எனவே இப்பதிவில் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் முறையை (Apply Aadhaar Card for Child in Tamil) பாா்க்கலாம்.

குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் முறை (Apply Aadhaar Card for Child)

குழந்தைக்கு மிகவும் சுலபமாக ஆதார் கார்டு விண்ணப்பிக்கலாம். அதற்கு ஒரே ஒரு சான்று இருந்தால் போதுமானது. அது என்ன சான்று என்றால் குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) தான் அது. ஆம் பிறப்பு சான்று மட்டும் இருந்தால் போதும், அதனை கொண்டு எளிமையான முறையில் விண்ணப்பிக்கலாம். ஆதார் கார்டினை விண்ணப்பிக்க வேண்டும் என்றால் இ-சேவை மையங்களுக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கு சென்று வெகுநேரம் காத்திருக்காமல் முன்னதாகவே அப்பாய்ன்மென்ட் புக் செய்து குறித்த நேரத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். பிறந்த குழந்தை என்பதால் Biometric scan செய்ய தேவை இல்லை. எனவே இப்பதிவில் Apply Aadhaar Card for Child பற்றி பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுப்பது எப்படி (Aadhaar Card Application for Child)

Step 1: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுதல்

Apply Aadhaar Card
  • முதலில் ஆதாரின் அதிகாரபூா்வ இணையதளமான uidai.gov.in தளத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில் மொழியை தோ்வு செய்யவும்.

Step 2: My Aadhaar-ஐ தேர்வு செய்தல்

Aadhaar Apply Online
  • இப்பக்கத்தில் உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் திரையில் My Aadhaar (எனது ஆதார்) Option கீழ் ஒரு சந்திப்பை அதாவது Book An Appointment option-ஐ கிளிக் செய்யவும்.  

Step 3: மொபைல் எண்ணை சரிப்பார்த்தல்

Apply Aadhaar Card Online
  • Select City/Location option-க்கு கீழ் உள்ள Proceed to Book Appointment என்பதை கிளிக் செய்யவும்.
  • இந்த பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும் பிறகு கீழே உள்ள Captcha-வை உள்ளிட்டு Send OTP-ஐ கிளிக் செய்யவும். 
  • உங்களுடைய மொபைல் எண்ணிற்கு 6 எண்கள் கொண்ட OTP அனுப்பப்படும், அந்த OTP-ஐ உள்ளிடவும், பிறகு Submit OTP & Proceed option-ஐ கிளிக் செய்யவும்.

Step 4: முழு விவரங்களை உள்ளிடுதல்

Baal Aadhaar Card
  • இப்போது இப்பக்கத்தில் New Enrollment-ஐ கிளிக் செய்யவும். அதன் பிறகு அந்தப் பக்கத்தில் குழந்தையின் பெயர் (Name), பிறந்த தேதி (Date of Birth) அல்லது அதே இடத்தில் குழந்தையின் வயது (Age) ஆகிய அடிப்படை விவரங்களை உள்ளிட்டு  Save & Proceed option-ஐ கிளிக் செய்யவும். 

Step 5: விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பக்கம்

Apply Aadhaar card For Kids
  • இப்பக்கத்தில் கேட்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் முழுமையாக உள்ளிட்டு Submit செய்யவும்.
  • புதிய பக்கத்தில் Your Application Has Been Submitted என்றும் அதன் கீழே Your Appointment ID(AID) IS என்று ஒரு எண் திரையில் தெரியும் அதனை நோட் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • அதன் பிறகு கீழே Book Appointment கிளிக் செய்யவும். இப்போது உங்கள் Appointment Book செய்யப்பட்டது. அந்த Appointment ID-யை கொண்டு சரியான நேரத்தில் Enrolment Centre சென்று எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பித்த 90 நாட்களில் உங்கள் முகவரிக்கு ஆதார் அட்டை வந்தடையும்.

இப்பதிவில் Apply Aadhaar Card for Child பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பிறகு ஆதார் அட்டை நிலவரத்தையும் (Aadhaar Card Status) பார்க்கலாம். அல்லது நமது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பிறகு அதனை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

பால் ஆதார் அட்டை (Baal Aadhaar card)

Apply Aadhaar Card for Child
  • குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பால் ஆதாா் அட்டை (Baal Aadhaar card) என அழைக்கப்படுகிறது. இதில் ஆதார் எண் மற்றும் குழந்தையினுடைய அடிப்படை விவரங்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும்.
  • இவை குழந்தையின் பெற்றோா்கள் ஆதார் அடிப்படையில் அமையும். 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த திட்டம் உள்ளது.
  • எனவே குழந்தை 5 வயதை கடக்கும் போது ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும். அப்போது வழக்கம்போல் கண், கை ரேகை ஆகிய Biometric scan செய்யப்பட்டு ஆதார் அட்டை அப்டேட் செய்ய வேண்டும். அதேபோல் உங்கள் குழந்தை 15 வயதை அடையும் போதும் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும்.

இப்பதிவில் கூறப்பட்டுள்ள Apply Aadhaar Card for Child பற்றிய தகவல்களை பயன்படுத்தி எளிய முறையில் விண்ணப்பித்து பால் ஆதார் அட்டையை நாம் பெறலாம்.

FAQ – குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பது

1. குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையின் பெயர் என்ன?

குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை பால் ஆதார் அட்டை என அழைக்கப்படுகிறது.

2. பால் ஆதார் அட்டை என்றால் என்ன?

5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை பால் ஆதார் அட்டை ஆகும்.

3. ஆதார் அட்டை விண்ணப்பித்த எத்தனை நாட்களில் கிடைக்கும்?

ஆதார் அட்டை விண்ணப்பித்த 30 முதல் 90 நாட்களில் கிடைக்கும்.

4. ஆதார் கார்டு எடுக்க தேவையான ஆவணங்கள் என்ன?

ஆதார் கார்டு எடுக்க தேவையான ஆவணங்கள் பிறப்பு சான்று மற்றும் முகவரி சான்று ஆகும்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular