Homeசெய்திகள்ஆயுத பூஜைக்கு 4,000 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..!

ஆயுத பூஜைக்கு 4,000 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..!

ஆயுத பூஜை பண்டிகையின் தொடர் விடுமுறையை முன்னிட்டு 4,000 சிறப்பு பேருந்துகளை இன்று முதல் இயக்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) அறிவித்துள்ளது. இதுபோன்ற விசேஷ நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து கழகம் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து இத்தகைய சிறப்பு பேருந்துகளை இயக்குவது உண்டு.

3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்

வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை என்றாலே அனைவரும் Jolly ஆகிவிடுவார்கள். இதில் வார இறுதியோடு அரசு விடுமுறை இரண்டு நாட்களும் சேர்ந்து வந்தால் சொந்த ஊருக்கு செல்வது, சுற்றுலா செல்வது என Plan செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதுபோன்று சுற்றுலா செல்லும் பிளானுக்கு பெரிதும் உதவுவது போக்குவரத்து துறையே ஆகும். இந்த வருடம் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வருவதால் சிறப்பு பேருந்துகள் அக்டோபர் 20, 21, மற்றும் 22 ஆகிய மூன்று தினங்களுக்கு இயக்குவதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் மேலும் 2 பேருந்து நிலையங்கள் ஏற்பாடு

சென்னையில் பொதுவாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தான் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். தற்போது Ayudha Poojai விடுமுறையால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் தாம்பரம் மெப்ஸ் மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலை என இரண்டு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் மேலும் 2,265 Special Buses இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, அரியலூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி மேலும் பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
  • தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், புதுச்சேரி, காட்டுமன்னார்கோயில், கடலூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
  • பூந்தமல்லி Bypass இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர், திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

தொழில் நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள்

பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய தொழில் நகரங்களில் இருந்து பிற நகரங்களுக்கு 1,700 Ayuda Poojai சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பொரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்யாமலே பேருந்து நிலையத்திற்கு வருவார்கள் என்பதால் முன்பதிவு செய்யப்படாத பேருந்துகள் அதிக அளவு இயக்கப்படும் என கருதப்படுகின்றது. முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் பயணிக்க விரும்புபவர்கள் TNSTC -ன் அதிகாரப்பூர்வ www.tnstc.in இணையதள பக்கத்திலும் அல்லது TNSTC மொபைல் செயலியை (Mobile App) பயன்படுத்தலாம்.

இந்த தொடர் விடுமுறை நாட்களில் பேருந்துகள் தடையின்றி இயங்குவதற்கும் வகையில் அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. அடுத்து வரும் ஆறு நாட்களுக்கு விடுப்பு எடுக்க கூடாது என்றும், மீறினால் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular