Homeசெய்திகள்Ayyan App: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் மொபைல் செயலி..!

Ayyan App: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் மொபைல் செயலி..!

கார்த்திகை மாதம் பிறந்தாலே சபரிமலைக்கு இருமுடி கட்டி பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் மண்டல கால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16 தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை திருநடை திறக்கப்பட்டது. நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.05-க்கு பக்கதர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மதியம் 1.30 மணிக்கு நடை சார்த்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இரவு 11 மணி அளவில் அபிஷேகங்கள் முடிந்து நடை சார்த்தப்படுகிறது.

இதற்கிடையே சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு உதவும் வகையில் கேரளா வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் Ayyan App எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி பெரியார் வனவிலங்கு சரணாலயம் மேற்கு பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த அய்யன் செயலி தமிழ் (Ayyan App in Tamil), கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. இந்த செயலி Online மற்றும் Offline-களில் செயல்படும்.

இந்த செயலி Google Play Store-ல் கிடைக்கிறது. இந்த ஆப் மூலம் மண்டலகால பூஜைகள் ஆகியவற்றை உடனடியாக தெரிந்துக்கொள்ள முடியும். சபரிமலை செல்லும் பக்தர்கள் வழியில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவைகள் என அனைத்தையும் இந்த செயலி மூலம் தெரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் அவசர கால உதவிக்காக தீயணைப்பு, வனத்துறை, மெடிக்கல், ரயில்வே, மின்சார வாரியம் ஆகியவற்றின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை உபயோகித்து பக்தர்கள் உதவிகளை கேட்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ayyan App

இந்த செயலி பம்பா, சன்னிதானம், சுவாமி ஐயப்பன் சாலை, எருமேலி-அழுதா கட்-பம்பை, பம்பை-நீலிமலை-சன்னிதானம், சத்திரம்-உப்பு பாறை உள்ளிட்ட பாதைகளுக்கான பல்வேறு சேவைகள் குறித்த தகவல்கள் இந்த செயலில் இடம்பெற்றுள்ளன. எருமேலியில் இருந்து பாரம்பரியமாக செல்லும் பக்தர்களுக்கு வழியில் தங்குமிடங்கள், யானைக் கண்காணிப்பு குழு, பொது கழிப்பிடங்கள், இலவச குடிநீர் இடங்கள், அடுத்து செல்ல வேண்டிய தொலைவு ஆகியவை இந்த செயலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். இதனை காண்பதற்காகவே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீப ஒளியில் ஜெலிக்கும் ஐயப்பனை காண இந்த வருடம் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மொபைல் செயலி அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular