Homeசெய்திகள்மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்.. முதல்வர் நேரில் அஞ்சலி..!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்.. முதல்வர் நேரில் அஞ்சலி..!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் தனது 82 வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் மாரடைப்பால் மேல்மருவத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அக்டோபர் 19 உயிரிழந்துவிட்டார்.

ஆன்மீக சீர்த்திருத்தவாதி, ஆன்மீக சொற்பொழிவாளர். பக்தர்களால் அன்போடு “அம்மா” என்று அழைக்கப்பெற்றவர் பங்காரு அடிகளார். அவரது இறப்பு செய்தி இலட்சக்கணக்கான பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பங்காரு அடிகளார் 2019- ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ பட்டம் பெற்றார். ஆரம்பக்காலத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை தொடங்கினார். அது மட்டுமல்லாமல் பல்வேறு சமூக சேவைகளை செய்துவந்தார்.

கருவறையில் பெண்களும் வழிபடலாம் என்று ஆன்மீகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆரம்பகாலத்தில் ஒரு கொட்டகை அமைத்து அதில் அம்மனை வைத்து வழிபட்டு வந்தநிலையில் காலம் செல்ல செல்ல பக்கதர்களால் நம்பிக்கையும், கூட்டமும் அதிகரித்தது.

அவர் மறைவையொட்டி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இன்று மதுராங்கம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேல்வருத்தூரில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் உள்ளனர். முக்கிய பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று காலை 9 மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். முதல்வர் அவர்கள் நேற்று அறிவித்த இரங்கல் செய்தியில் பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular