HomeவரலாறுBharathidasan Biography in Tamil: பாரதிதாசன் வாழ்க்கை குறிப்பு..!

Bharathidasan Biography in Tamil: பாரதிதாசன் வாழ்க்கை குறிப்பு..!

Bharathidasan Biography in Tamil: “தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர். தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாக கற்று, தமிழ் கவிதைகளில் புரட்சி செய்தவர். கவிஞர், தமிழாசிரியர், அரசியல்வாதி, திரைக்கதாசிரியர், எழுத்தாளர் என பல்துறைகளில் சிறந்து விளங்கியவர். தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய பங்கு, அதன் மூலம் தமிழின் இனிமையை மக்களிடம் கொண்டு சென்றவர். இந்த புகழுக்கு சொந்தக்காரர் புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலரான பாவேந்தர் பாரதிதாசன்.

நாம் இந்த பதிவில் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி முழுமையாக பார்க்க உள்ளோம். அவர் தமிழ் மொழிக்கு ஆற்றி தொண்டு, அரசியலில் அவருடைய பயணம் போன்றவற்றை (Bharathidasan vazhkai varalaru in Tamil) பார்க்க உள்ளோம்.

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

பிறப்புஏப்ரல் 29, 1891
பிறந்த ஊர் புதுவை (புதுச்சேரி)
பெற்றோர்கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள்
திருமணம்1920-ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.
இறப்பு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி, 1964-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

பிறப்பு

புரட்சிக்கவி பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் சுப்புரத்தினம். இவரின் தந்தை அவ்வூரில் மிகப்பெரிய வணிகராக இருந்தார். இவர் தனது தந்தையின் பெயரின் முதல் பாதியை இணைத்து பின்நாளில் இவர் “கனகசுப்புரத்தினம்” என்று (Bharathidasan Life History In Tamil) அழைக்கப்பட்டார்.

கல்வி மற்றும் இளமை பருவமும்

பாரதிதாசனின் சிறுவயதில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இருந்ததால், இவர் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் இவருக்கு தமிழ் மொழி மீது அதீத பற்று இருந்தன் காரணமாக இவர் தமிழ் மொழியினை முறையாக கற்க ஆரம்பித்தார். இவர் சிறுவயதிலேயே தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியங்கள் மற்றும் சைவ சித்தாத்தங்களை முறையாக கற்று தேர்ந்தார். சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். அதன் பின்னர் இவர் கல்லூரி படிப்பில் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு கல்வி கற்றக ஆரம்பித்தார்.இவர் இளங்கலை தமிழில் பல்கலைக்கழத்தில் முதல் மாணவராக தேர்ச்சிப்பெற்றார். தமிழ் மொழியில் இத்தகைய புலமை அவருக்கு இருந்ததால் 1919 காரைக்காலில் உள்ள அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக பதவியேற்றார்.

திருமண வாழ்க்கை

பாரதிதாசன் தமிழாசிரியராக பணியாற்றி கொண்டிருக்கும் போதே 1920 -ஆம் ஆண்டு பழநி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதற்கு பிறகு 3 பெண் குழந்தைகள் பிறந்தன. மகன் பெயர் மன்னர்மன்னன், பெண் குழந்தைகள் பெயர்கள், சரஸ்வதி, வசந்தா, ரமணி.

பாரதியார் மற்றும் பாரதிதாசன் சந்திப்புBharathidasan Biography in Tamil

பாரதிதாசன் அவர் நண்பர் திருமணவிழாவிற்கு சென்றபோது, ஒரு பாடல் ஒன்றை அங்கு பாடினார். அந்த திருமணவிழாவிற்கு பாரதியாரும் வந்திருந்தது பாரதிதாசனுக்கு தெரியாது. பாரதிதாசன் பாடிய பாடல் மிகவும் பாரதியாருக்கு பிடித்துவிட்டது. பிறகு பாரதியார் அவரை சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தார். பாராட்டுகள் கிடைத்தது மட்டுமல்லாமல் அவருடன் நட்பும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாரதியார் தான் நடத்தி வந்த “சுதேசிமித்ரன்” என்னும் இதழில் பாரதிதாசன் எழுதிய பாடலை வெளியிட்டுள்ளார். இதன் பின்னர் கனகசுப்புரத்தினம் என்னும் அவர் பெயரை பாரதிதாசன் (About Bharathidasan in tamil) என்று மாற்றிக்கொண்டார்.

பாரதிதாசன் படைப்புகள் – Bharathidasan Kavithaigal

வ.எண்நூலின் பெயர்வகை
1அகத்தியன்விட்ட புதுக்கரடிகாவியம்
2சத்திமுத்தப்புலவர்நாடகம்
3இன்பக்கடல்நாடகம்
4அமிழ்து எது?கவிதை
5அமைதிநாடகம்
6அழகின் சிரிப்புகவிதை
7இசையமுது (முதலாம் தொகுதி)இசைப்பாடல்
8இசையமுது (இரண்டாம் தொகுதி)இசைப்பாடல்
9இந்தி எதிர்ப்புப் பாடல்கள்இசைப்பாடல்
10இரணியன் அல்லது இணையற்ற வீரன்நாடகம்
11இருண்டவீடுகாவியம்
12இலக்கியக் கோலங்கள்குறிப்புகள்
13இளைஞர் இலக்கியம்கவிதை
14உலகம் உன் உயிர்கவிதை
15உலகுக்கோர் ஐந்தொழுக்கம்கட்டுரைகள்
16எதிர்பாராத முத்தம்கவிதை
17எது இசை?சொற்பொழிவும் பாடல்களும்
18ஏழைகள் சிரிக்கிறார்கள்சிறுகதைகள்
19ஏற்றப் பாட்டுஇசைப்பாடல்
20ஒரு தாயின் உள்ள மகிழ்கிறதுஇசைப்பாடல்
21கடற்மேற் குமிழிகள்காவியம்
22கண்ணகி புரட்சிக் காப்பியம்காவியம்
23கதர் இராட்டினப்பாட்டுஇசைப்பாடல்
24கவிஞர் பேசுகிறார்சொற்பொழிவு
25கழைக்கூத்தியின் காதல்நாடகம்
26கற்கண்டுநாடகம்
27காதலா? கடமையா?காவியம்
28காதல் நினைவுகள்கவிதை
29காதல் பாடல்கள்கவிதை
30குடும்பவிளக்கு – முதல் பகுதிகாவியம்
31குடும்ப விளக்கு – 2ஆம் பகுதிகாவியம்
32குடும்ப விளக்கு – 3ஆம் பகுதிகாவியம்
33குடும்ப விளக்கு – 4ஆம் பகுதிகாவியம்
34குடும்ப விளக்கு – 5ஆம் பகுதிகாவியம்
35குமரகுருபரர்நாடகம்
36குயில் பாடல்கள்கவிதை
37குறிஞ்சித்திட்டுகாவியம்
38கேட்டலும் கிளத்தலும்கேள்வி-பதில்
39கோயில் இருகோணங்கள்நாடகம்
40சஞ்சீவி பர்வதத்தின் சாரல்காவியம்
41சிரிக்கும் சிந்தனைகள்துணுக்குகள்
42சிறுவர் சிறுமியர் தேசியகீதம்கவிதை
43சுயமரியாதைச் சுடர்பாட்டு
44செளமியன்நாடகம்
45சேரதாண்டவம்நாடகம்
46தமிழச்சியின் கத்திகாவியம்
47தமிழியக்கம்கவிதை
48தமிழுக்கு அமிழ்தென்று பேர்கவிதை
49தலைமலை கண்ட தேவர்நாடகம்
50தாயின் மேல் ஆணை கவிதை
51தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டுபாட்டு
52திராவிடர் திருப்பாடல்கவிதை
53திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்கவிதை
54தேனருவிஇசைப்பாடல்
55தொண்டர் வழிநடைப் பாட்டுபாட்டு
56நல்லதீர்ப்புநாடகம்
57நாள் மலர்கள் கவிதை
58படித்த பெண்கள்நாடகம்
59பன்மணித்திரள்கவிதை
60பாட்டுக்கு இலக்கணம்இலக்கணம்
61பாண்டியன் பரிசுகாவியம்
62பாரதிதாசன் ஆத்திசூடிகவிதை
63பாரதிதாசன் கதைகள்சிறுகதை
64பாரதிதாசனின் கடிதங்கள்கடிதங்கள்
65பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி)கவிதை
66பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)கவிதை
67பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)கவிதை
68பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி)கவிதை
69பாரதிதாசன் நாடகங்கள்கவிதை
70பாரதிதாசனின் புதிய நாடகங்கள்நாடகங்கள்
71பாரதிதாசனின் புதினங்கள்புதினம்
72பாரதிதாசன் பேசுகிறார்சொற்பொழிவு
73பாரதிதாசன் திருக்குறள் உரைஉரை
74பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்திரைக்கதை
75பிசிராந்தையார்நாடகம்
76புகழ்மலர்கள்கவிதை
77புரட்சிக் கவிகவிதை
78பொங்கல் வாழ்த்துக் குவியல்கவிதை
79மணிமேகலை வெண்பாகவிதை
80மயிலம் சுப்பிரமணியர் துதியமுதுஇசைப் பாடல்
81யிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம்கவிதை
82மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டுஇசைப்பாடல்
83மானுடம் போற்றுகட்டுரைகள்
84முல்லைக்காடுகவிதை
85வந்தவர் மொழியா?இலக்கணம்
86வேங்கையே எழுககவிதை

பாரதிதாசனின் சிறப்பு பெயர்கள்Bharathidasan Life History In Tamil

  • பாவேந்தர்
  • புரட்சிக்கவிஞர்
  • பாரதிதாசன்
  • தமிழ் கவி

பாரதிதாசனின் அரசியல் ஈடுபாடு

Bharathidasan Biography in Tamil

பாரதிதாசன் தமிழ் தொண்டிற்கு மட்டுமல்லாமல், அரசியலிலும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிணார். இதன் காரணமாக 1954 ஆம் ஆண்டு புதுவை சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி கண்டார். பாரதிதாசனுக்கு பெரியாரின் கொள்கைகள் மீது மிகுந்த பற்று இருந்தது. இதன் காரணமாக அவர் அவரின் கடவுள் மறுப்பு கொள்கைகளை ஆதரித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் கடவுள் மறுப்பு கொள்கைகளை அவர் கவிதைகளின் மூலம் வெளிப்படுத்தி வந்தார்.

மீண்டும் பாரதிதாசன் 1960 ஆம் ஆண்டு புதுவை சட்டமன்ற தேர்தலில் நின்றார். ஆனால் அந்தாண்டு அவர் தோல்வியை தழுவினார்.

பாரதிதாசனுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம்

பாரதிதாசன் அரசியலில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்து வந்தார். அவர் மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வந்தார். இதனை கண்ட அறிஞர் அண்ணா பாரதிதாசனை பாராட்டி புரட்சிக்கவி என்னும் அடைமொழியை கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.25,000 சன்மானமும் கொடுத்தார்.

மேலும் படிக்க: Kamarajar History in Tamil..! காமராஜர் வாழ்க்கை வரலாறு..!

பாரதிதாசனுக்கு கொடுத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

காலவரிசை விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
1946இவர் எழுதிய அமைதி மற்றும் ஊமை என்ற நாடகத்திற்காக தங்கக்கிளி பரிசு கொடுக்கப்பட்டது.
1946 புரட்சிக்கவி என்னும் பட்டம் அறிஞர் அண்ணா வழங்கியுள்ளார்.
1970பிசிராந்தையார் நாடகத்திற்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
1990இவருடைய படைப்புகள் தமிழக அரசினால் உடைமையாக்கப்பட்டன.
2001சென்னை தபால் துறை இவரது நினைனவாக ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது.
தமிழக அரசு ஆண்டுதோறும் ஒரு தமிழக் கவிஞருக்கு பாரதிதாசன் என்னும் விருதை வழங்கி வருகிறது.
இவரது பெயரில் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழம் இடம்பெற்றுள்ளது. (Bharathidasan University)

பாரதிதாசன் திரைப்பயணம்

1937-ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் அவரது இறுதிநாள் வரை திரைத்துறைக்குக் கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு என பல்வேறு கோணங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார். திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார்.

பாரதிதாசன் இறப்பு

தமிழுக்காக தனது பங்களிப்பை கொடுத்த பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964ஆம் ஆண்டில் இயற்கை (Bharathidasan History) எய்தினார்.

Bharathidasan – FAQ

1. புரட்சிக்கவிஞர் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?

புரட்சி கவிஞர்’ என்ற பட்டத்தை பெரியாரும் ‘புரட்சிக்கவி’ என்ற பட்டத்தை அறிஞர் அண்ணாவும் வழங்கினார்கள்.

2. பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

3. பாரதிதாசனுக்கு வழங்கப்பட்ட பட்டம் எது?

பாவேந்தர்’ என்னும் பட்டம் தமிழ் மக்கள் இவர்மீது கொண்ட அன்பால், இயல்பாகவே மக்களால் வழங்கப்பட்டது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular