Homeசெய்திகள்7,000 பிரபலங்களுக்கு அழைப்பு..! விமர்சையாக நடைபெறவுள்ள ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி..!

7,000 பிரபலங்களுக்கு அழைப்பு..! விமர்சையாக நடைபெறவுள்ள ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி..!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ. 1800 கோடி செலவில் கட்டப்படுகிறது. இக்கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் 2.7 ஏக்கர் ஆகும். இதில் 57,400 சதுரடியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இக்கோவிலானது இதற்கு முன் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றமானது, கடந்த 2019-ம் ஆண்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும்படி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் சுமார் 2.27 ஏக்கர் பரப்பளவில் மூன்று அடுக்குகளில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

Ayodhya Ramar Temple

இந்நிலையில் இக்கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்ட உள்ளது. மேலும் இந்த ராமர் சிலை வருகின்ற ஜனவரி மாதம் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த குழந்தை ராமரின் சிலையானது 8 அடி உயரம், 3 அடி நீளம் மற்றும் 4 அடி அகலம் கொண்டதாகும். தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

‘எனது வாழ்நாள் அதிர்ஷ்டம்’ என பிரதமர் மோடி கூறியது ஏன்?

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோயில் நிர்வாகம் மூலம் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 7,000-க்கும் மேற்பட் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதிலும் குறிப்பாக முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ரத்தன் டாடா மற்றும் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், கங்கனா ரணாவத் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் தீவிர சோதனை..! என்ன நடந்தது?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular