Homeசெய்திகள்போக்குவரத்து விதியில் திடீர் மாற்றம்..! அபராத தொகையை அறிவித்தது போக்குவரத்து துறை..!

போக்குவரத்து விதியில் திடீர் மாற்றம்..! அபராத தொகையை அறிவித்தது போக்குவரத்து துறை..!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆண்டுதோறும் அதிக அளவு மக்கள் தொகை பெருகி வருகிறது. இதனால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வருவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சென்னை நகரத்தில் புதிய விதிமுறைகளை வாகன ஓட்டிகளுக்கு வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் விதிக்கப்பட உள்ளது. அதன்படி இலகுரக வாகனங்கள் அதிகப்பட்சமாக 60 கி.மீ வேகத்திலும், கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்திலும், இரு சக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்திலும் செல்ல வேண்டும் என்றும் குடியிருப்பு பகுதிகளில் அதிகபட்சமாக அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் தான் செல்ல வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Penalty Amount

Traffic Rules பின்பற்றாமல் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது, டிராபிக் லைட்டுகளை பின்பற்றாமல் இருப்பது, சாலைகளின் கோடுகளை மதிக்காமல் நிற்பது, ரேஷ் ட்ரைவிங் ஈடுபடுவது இது போன்ற காரணங்களால் சென்னையில் பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 50 சதவீத பேரின் வாகனங்கள் மற்றும் 12600 லைசன்ஸ்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அபராத தொகை அறிவிப்பு

சென்னையில் தற்போது வாகனங்களின் வேகக்கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவித்துள்ள நிலையில் இதனை மீறினால் fine விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 183-ன் படி

  • இலகுரக மோட்டார் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு ரூ.1,000/-
  • கனரக வாகனங்கள் ரூ.2,000/-

சாலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடாமல் இருப்பவர்களுக்கு ரூ.10,000/- Penalty விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் டிடிஎப் வாசன் சாலையில் பைக் ஸ்டண்ட் செய்ததால் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற பைக் ஸ்டண்ட் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular