Homeசெய்திகள்Chennai Traffic Rules: 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமலுக்கு வருகிறது..!

Chennai Traffic Rules: 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமலுக்கு வருகிறது..!

சென்னையில் வரும் நவம்பர் 4-ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இந்த விதிமுறைகள் இதற்குமுன் கடந்த 2003-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

வாகனத்தின் வேக வரம்பு எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட உள்ளது, மற்றும் விதிகளை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை இப்பதிவின் மூலம் காணலாம்.

சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஆண்டுதோறும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் Traffic rules மீறுவதாலும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக சென்னையில் வாகனங்களின் வேகத்தின் வரம்பு நிர்ணயம் (Speed Limit in Chennai City) செய்யப்பட்டுள்ளது.

வாகன வேக வரம்பு

இந்த புதிய விதிமுறைகளின்படி சென்னையில் கனரக வாகனங்கள் (HMVs) 50 கி.மீ வேகத்ததில் செல்ல வேண்டும். இலகுரக வாகனங்கள் (LMVs) 60 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் (Two Wheeler) 50 கி.மீ மற்றும் ஆட்டோக்கள் (Auto rickshaws) 40 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் (Residential Areas) அனைத்து வாகனங்களும் அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை செய்தி குறிப்பில் வெளியாகி உள்ளது.

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்

கடந்த 2022 ஆண்டிற்கான சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை அக்டோபர் 31-ம் தேதி மத்திய அமைச்சகம் வெளியிட்டது. இதில் சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனையெடுத்து வாகனங்களின் வேக கட்டுப்பாட்டை காவல்துறை நிர்ணயித்துள்ளது. இதற்குமுன் கடந்த ஜூன் மாதம் இது போன்ற ஒரு அறிவிப்பை காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர்.

அதில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை அனைத்து வாகனங்களும் 50 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ வேகத்திலும் செல்ல வேண்டும் என அறிவித்தது. ஆனால் பொதுமக்களிடையே இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. காரணம் சாலைகளை முறையாக பராமரித்தாலே விபத்துகளை தவிர்கலாம் என்றும் இந்த அறிவிப்பு மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதாக அப்போது கருத்து தெரிவித்தனர்.

விதிகளை மீறினால் என்னவாகும்

இந்த விதிமுறைகளை மீறினால் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இது குறித்து காவல்துறையினரிடம் இருந்தது எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular