Homeசெய்திகள்முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி..! திடீர் உடல்நலக்குறைவு..!

முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி..! திடீர் உடல்நலக்குறைவு..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காய்ச்சல் அறிகுறி இருந்த நிலையில் இன்று அவருக்கு வைரல் காய்ச்சல் (Viral Flu) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதித்த அவருக்கு மருத்துவர்கள் சோதனை செய்துவிட்டு வைரல் காய்ச்சல் இருப்பதாகவும் அதனால் சற்று ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

அதாவது CM Stalin-க்கு நேற்றும், இன்றும் காய்ச்சல், இருமல் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவில்லை.

Stalin was affected by viral flu

சென்னை பெசன்ட் நகரில் “நடப்போம் நலம் பெறுவோம்” (Health Walk) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதனை முதல்வர் தொடங்கி வைப்பதற்காக இருந்த நிலையில் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை இராஜஅண்ணாமலைபுரத்தில் உள்ள Madras ENT Research Foundation (P) Ltd சார்பில் முதல்வர் உடல்நலம் குறித்த அறிக்கை Cheap surgeon இயக்குனர் மோகன் காமேஸ்வரன் பெயரில் வெளியிடப்பட்டது.

இதனால் முதல்வருக்கு வைரல் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில நாட்கள் அவர் எந்த நிகழ்சிகளிலும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular