Homeசெய்திகள்அதிரடி அறிவிப்பு கேஸ் சிலிண்டர் ரூ.500..! பெண்களின் உரிமைத் தொகை ரூ.10,000…! தேர்தல் வாக்குறுதிகள்..!

அதிரடி அறிவிப்பு கேஸ் சிலிண்டர் ரூ.500..! பெண்களின் உரிமைத் தொகை ரூ.10,000…! தேர்தல் வாக்குறுதிகள்..!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் அண்மையில் தேர்தல் தேதி அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுப்பிடித்துள்ளது.

இந்த 5 மாநிலங்களில் வரும் நவம்பர் 30-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ராஜஸ்தானை பொருத்தமட்டில் அங்கு 200 தொகுதிகள் உள்ளன. இதனால் அங்கு காங்கிரஸும் பிஜேபியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆளும் அங்கு அசோக் கெலாட் முதலமைச்சராக இருக்கிறார். 1993-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பின் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு, காங்கிரஸும் பிஜேபியும் மாறி மாறி ஆட்சியமைத்தனர்.

தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் மக்களுக்கு ஆட்சியின் மேல் எதிர்மனநிலை அமைந்தால் பாஜக வர வாய்ப்புள்ளது. பாஜக- விற்கு ஆட்சியமைக்க நல்ல கட்டமைப்பு இருப்பதாலும், பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் அதிக அளவில் பொது கூட்டங்களை நடத்தி வருவதால் அவர்களுக்கு இந்த முறை அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. அதே சமயம் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேஷ்-க்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததும் இக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட பேரணியில் அவர் கேஸ் சிலிண்டர் ரூ.500, பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.10,000 என அறிவித்திருந்தார். இது பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

5-major-election-promises-in-rajasthan

இந்நிலையில் நேற்று அவர் ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைத்தால், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அறிவித்தார்.

வாக்குறுதிகள்

  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருதல்.
  • அரசுக் கல்லூரில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட்.
  • பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்துதல்.
  • இயற்கை பேரிடர்களின் போது ஏற்படும் சேதங்களுக்கு ரூ.15 லட்சம் காப்பீடு அளித்தல்.
  • ‘Godhan’ திட்டத்தின் மூலம் பசுஞ்சாணத்தை கிலோ ரூ.2 கொள்முதல் செய்தல். இந்த அறிவிப்பு பாஜக மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular