Homeசெய்திகள்இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! மே 1 முதல் குறையும் சிலிண்டர் விலை..!

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! மே 1 முதல் குறையும் சிலிண்டர் விலை..!

இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் சிலிண்டர்கள் பயன்படுத்தும் வீடுகளே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அனைவராலும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எந்த அளவிற்கு என்றால் இது அடிப்படை தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஆனால் இந்த சிலிண்டர்களில் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் மானிய விலையில் சிலிண்டர் போன்ற பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இப்போது ஒரு புதிய விலை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த மே 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் தகவல் (Cylinder Price Down) வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி கடந்த மாதம் முதல் வீட்டு மற்றும் வணிக உபயோக சிலிண்டர் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே வந்தது.

இந்த நிலையில் தான் வரும் மே மாதம் 1-ம் தேதி சிலிண்டர்களின் விலை அதிரடியாக குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி வரியும் குறைய அதிக அளவிலான வாய்ப்புகள் (Cylinder Price) உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலின் காரணமாக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன வான என்ற அனைவராலும் கூறப்படுகிறது.

Cylinder Price
இதையும் படியுங்கள்: மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி… 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular