Homeசெய்திகள்தீபாவளிக்கு 10,975 சிறப்பு பேருந்துகள்..! தமிழக அரசு அறிவிப்பு..!

தீபாவளிக்கு 10,975 சிறப்பு பேருந்துகள்..! தமிழக அரசு அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வதற்காக தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்து தரப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Tamil Nadu State Transport Corporation (TNSTC) சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. தீபாவளி என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம்தான். அன்று புத்தாடை அணிந்து, வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது ஒரு தனி சந்தோஷம். ஆனால் Deepavali வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்று கிழமை வருவது வருத்தமாக இருந்தாலும் சொந்த ஊருக்கு சென்று குடும்பங்களுடன் கொண்டாடுவது என்பது மகிழ்ச்சிதான்.

வெளியூரில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ரயில், பேருந்து போன்றவற்றில் செல்வார்கள். ரயிலில் செல்ல வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்னதாகவே பதிவு செய்யபட வேண்டும். இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதமே ரயில் டிக்கெட்டுகள் எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. பண்டிகையை கொண்டாடுவதற்காக பேருந்தில் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் சார்பில் போக்குவரத்து கழகம் Deepavali Sirappu Perunthu பற்றிய அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

10,975 சிறப்பு பேருந்துகள்

Diwali Sepcial Buses Announce

தீபாவளி சிறப்பு பேருந்திற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நவம்பர் 9-ம் தேதி முதல் Deepavali Special Buses இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை தொடர்ந்து நவம்பர் 9-ம் தேதி 3,465 பேருந்துகளும், நவம்பர் 10-ம் தேதி 3,395 பேருந்துகளும், நவம்பர் 11-ம் தேதி 3,515 பேருந்துகளும் என மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்ப நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் 9,467 சிறப்பு பேருந்துகளும், மற்ற ஊர்களுக்குச் செல்ல 3,835 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையம்

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகபடியான கூட்ட நெரிசல் ஏற்படுவதால் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லலாம்.

  • கே.கே நகர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து, ECR வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் புறப்படும்.
  • மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் ஊத்துக்கோட்டை பேருந்துகள் புறப்படும்.
  • திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் (மெப்ஸ்) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்.
  • பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் செல்லும் பேருந்துகள் புறப்படும்.
  • தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, செஞ்சி, வந்தவாசி செல்லும் பேருந்துகளும் பண்ருட்டி, வடலூர், நெய்வேலி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular